For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணத்தில் இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனின் உருவ பொம்மையை மணிசங்கர் ஐயரின்ஆதரவாளர்கள் வியாழக்கிழமை காலை எரித்தனர்.

இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மணிசங்கர் ஐயர் கூறியதைஎதிர்த்து, இளங்கோவனின் ஆதரவாளர்கள், தென்சென்னை காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன் தலைமையில்மணிசங்கர ஐயரின் உருவ பொம்மையை புதன்கிழமை எரித்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக மணிசங்கர் ஐயரின் ஆதரவாளர்கள், கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ்தலைமையில், இளங்கோவனின் உருவ பொம்மையை கும்பகோணத்தில் வியாழக்கிழமை எரித்தனர். இவர்கள்இளங்கோவனுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம்காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X