For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கட்டபொம்மன் சிவாஜி"

By Staff
Google Oneindia Tamil News

கட்டபொம்மன் கதாபாத்திற்கு உருக் கொடுத்ததன் மூலம் அந்த வரலாற்றுப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர்நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

சிவாஜிகணேசனுக்கு 7 வயதான போது அவரது தந்தை சின்னையாபிள்ளை மன்றாடியார் சுதந்திரப் போராட்டத்தில்ஈடுபட்டுச் சிறைசென்றிருந்தார்.

அந்தச் சமயத்தில் தெருமுனைகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு வருவார் சிவாஜி. அப்போது கட்டபொம்மன் நாடகம் அவரது மனதைக் கவர்ந்தது.

வாழ்ந்தால் கட்டபொம்மன் போல் வாழவேண்டும் என்று அப்போது நினைப்பாராம் சிவாஜி. இந்த உந்துதல்பின்னர் கட்டபொம்மனாக நடிக்கவேண்டும் என்ற ஆசையை அவருக்கள் விதைத்தது.

வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியிலுள்ள ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார். அவரது ஆர்வத்தைப் பார்த்த அவரதுகுடும்பத்தினர் சிவாஜியை அதுரை பாலையா நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டனர்.

அங்கு அப்போது எம்.ஆர்.ராதா, காகா ராதாகிருஷ்ணன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். சிவாஜியும்அவர்களுடன் சேர்ந்தார். சிவாஜி முதலில் போட்ட வேடம் சீதை வேடம் தான்.

அதன் பின்னர் அகத்தியர், இந்திரஜித் என பல வேடங்களை அவர் போட்டுள்ளார்.

அப்போது நிறைய தலைமுடியுடன், நல்ல கலராகவும் இருந்ததால் நிறைய முறை பெண் வேடம் தான் கிடைக்குமாம்.அவருக்குப் பிடித்த வேடம் நூர்ஜஹான் தானாம்.

அண்ணாதுரை எழுதிய "இந்து சாம்ராஜ்யம்" என்ற நாடகத்தில் வீர சிவாஜி வேடத்தில் நடித்தார். நாடகத்தைப்பார்த்த, தந்தை பெரியார் அசந்து போனார். 10 மாநாடுகள் சாதிக்காததை ஒரு நாடகத்தில் தனது நடிப்பில் சாதித்துவிட்டார் கணேசன் என்று பாராட்டிய அவர், வி.சி.கணேசனை சிவாஜிகணேசன் என்று பட்டமளித்துப்பாராட்டினார்.

பராசக்தியில் அறிமுகமான சிவாஜி பல வேடங்களில் நடித்துள்ளார். அவர் நடிக்காத வேடமே இல்லை எனசொல்லலாம். அவரது படங்கள் அத்தனையும் மறக்க முடியாதவை என்றாலும், சில படங்கள் முத்திரை பதித்தவை.

பராசக்தி, பாசமலர், பாகப்பிரிவினை, பாரத விலாஸ், தில்லானா மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன்,ராஜராஜசோழன், திருவருட்செல்வர், முதல்மரியாதை, தேவர் மகன் என பல படங்கள் அவருக்குப் பெயர்வாங்கித்தந்தவை.

சடிப்புலகின் சக்கரவர்த்தியாகப் போற்றப் பட்ட சிவாஜிகணேசனின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப்பேரிழப்பாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X