For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் குடும்ப மர்மச் சாவு: சயனைட் தான் காரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சயனைட் விஷம் காரணமாகத் தான் ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்தனர் எனசென்னை நகர போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் கூறினார்.

ரமேஷ் குடும்பத்தின் மரணம் உண்மையில் தற்கொலையே அல்ல. அது தூண்டப்பட்ட தற்கொலை எனவும்தெரிவித்தார். பூச்சி மருந்து குடித்து இவர்கள் இறக்கவில்லை என்றார்.

சென்னை மேயரும் திமுக தலைவரின் மகனுமான மு.க. ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர் ரமேஷ். சென்னைமாநகராட்சி காண்ட்ராக்ட் உள்பட பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.

இவர் மூலமாக பலர் காண்ட்ராக்ட்களைப் பெற்றும் வந்தனர். தேர்தலின்போது ஸ்டாலினின் காரையும் ஓட்டியவர்இவர்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்யப் போகிறார்கள்எனத் தெரிந்தவுடன் ரமேஷ் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

ரமேஷைப் பிடித்தால் அவர் மூலமாக ஸ்டாலினின் சொத்துக்கள், சென்னை மாநகராட்சி காண்ட்ராக்ட்முறைகேடுகள் குறித்து விவரங்களைப் பெறவும் அவரிடம் ஸ்டானினுக்கு எதிராக வாக்குமூலம் வாங்கவும்போலீசார் திட்டமிட்டு அவரைத் தேடி வந்தனர். ஆனால், ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்.

இந் நிலையில் தான் தெய்வசிகாமணி என்ற காண்ட்ராக்டர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு ஸ்டாலின், ரமேஷ், திமுக முன்னாள் எம்.பி. பரசுராமன் ஆகியோர் மிரட்டுவதாதக்கூறியிருந்தார்.

காண்ட்ராக்டர் தெய்வசிகாமணியின் புகாரை ஏற்றுக் கொண்ட கே.கே. நகர் போலீசார் ரமேஷ் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.

ஆனால், போலீஸ் கையில் ரமேஷ் சிக்கவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். திடீரென கடந்த16ம் தேதி தனது மனைவி, 3 குழந்தைகளுடன் தனது சென்னை அண்ணாநகர் வீட்டில் பிணமாகக் கிடந்தார். வீட்டில்பூச்சி மருந்து டின்னும் அதன் அருதே பேண்டா பாட்டிலும் இருந்தது.

பூச்சி மருந்து குடித்திருந்தால் சுற்றி வாந்தியும், துடித்துக் கதறிய சுவடுகளும் இருந்திருக்கும். ஆனால், அவர்களின்உடல்கள் மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டது போல இருந்தன. அவர்கள் வாந்தி எடுத்து புரண்ட சுவடேஇல்லை.

வீட்டிலிருந்து 2 கடிதங்களும் பிடிபட்டன. முதலில் சிக்கிய கடிதம் 15ம் தேதி எழுதப்பட்டது. இரண்டாவதாக சிக்கியகடிதம் 13ம் தேதி எழுதப்பட்டது.

முதலில் எழுதிய கடிதத்தில் தெய்வசிகாமணியை எனக்குத் தெரியும். அவர் சென்னை மாநகராட்சிக்கு பலகாண்ட்ராக்ட்டுகளை எடுத்துள்ளார். ஆனால், அவரை நான் மிரட்டவில்லை. என்னை போலீஸ் மிரட்டுவதால் தான்தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தார்.

ஆனால், இரண்டாவதாக எழுதிய கடிதத்தில், எனக்கு தெய்வசிகாமணி யாரென்றே தெரியாது, எந்தகாண்ட்ராக்டரையும் தெரியாது, எனக்கும் ஸ்டாலினுக்கும் எந்தவிதமான அரசியல் உறவும் கிடையாது என்றுகூறப்பட்டுள்ளது.

இதனால், இந்த கடிதங்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரமேஷ் எழுதிய தற்கொலைக் கடிதம்உண்மையிலேயே அவர் எழுதியது தானா என்று தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X