For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2001க்கான சிறந்த சிற்பி விருது பெறுகிறார் முத்தையா ஸ்தபதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிற்பி எம். முத்தையா ஸ்தபதிக்கு, ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையால் 2001ம்ஆண்டுக்கான சிறந்த சிற்பிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ராஜா முத்தையா செட்டியார் அறக்கட்டளையின் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி திங்கள்கிழமைதெரிவித்தார்.

இந்த விருது, ராஜா முத்தைய செட்டியாரின் 97வது பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 5ம் தேதி வழங்கப்படும்என்றும் அவர் தெரிவித்தார். இந்த விருதின் மூலம் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் முத்தையா ஸ்தபதிக்குவழஙகப்படும்.

முத்தையா ஸ்தபதி புதுக்கோட்டை மாவட்டம் இளவன் கோட்டையில் பிறந்தவர். இவர் பல ராஜகோபுரங்களைக்கட்டியுள்ளார். பல சிலைகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செதுக்கியுள்ளார்.

இவரால் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 60 அடி உயர கிருஷ்ணன் சிலை இன்னமும் கோல்கத்தாவில் இருக்கும் பிர்லாஅருங்காட்சியகத்தில் இவரது பெருமையை பறைசாற்றி வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருக்கும் 60 அடிஉயர ஆதிசங்கரர் சிலையும் முத்தையா ஸ்தபதி செதுக்கியதுதான்.

அமெரிக்காவின் பல கோவில்களில் இவர் செதுக்கிய மீனாட்சி, வெங்கடேஸ்வரர் மற்றும் சிவா-விஷ்ணு சிலைகள்உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X