For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது என்ன யூ.டி.ஐ. ஊழல்?

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

கிட்டத்தடட ரூ. 60,000 கோடியளவுக்கு முதலீடுகளைக் கொண்ட அரசு நிதி நிறுவனம் யூ.டி.ஐ.

யூ.டி.ஐயின் பல திட்டங்களின் கீழ் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் முதலீடுகளைச் செய்துள்ளனர்.

முக்கியமாக யு.எஸ்-64 என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் கோடியை யூ.டி.ஐ. வசூலித்துள்ளது.

இந்த நிதியை யூ.டி.ஐ. பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பங்குகளைவாங்கியுள்ளது.

ஆனால், சமீப காலத்தின் யூ.டி.ஐயின் முதலீடுகள், நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம்உள்ளன.

ஹர்ஷத் மேத்தாவைப் போல பல்வேறு குற்றங்களுக்கு ஆளான பங்குச் சந்தை புரோக்கரான கேத்தன் பரேக்குக்குயூ.டி.ஐ. தனது நிதியை வழங்கியது பெரும் சர்ச்சையக் கிளப்பியது. பொது மக்களின் பணத்தை யூ.டி.ஐ. மோசடிநிறுவனங்களில் முதலீடு செய்ததை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.

ஆனால், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மழுப்பலான பதில்களையே தந்து வந்தார். அவரிடமிருந்துஉருப்படியான பதில் வரவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் யூ.டி.ஐயின் மியூச்சுவல் பண்ட் பங்குகள் மூலமான வசூல் சரியத் தொடங்கியது. இதற்குபங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தம் தான் காரணம் என விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து ராஜலட்சுமி திட்டம்போன்ற முக்கிய முதலீட்டுத் திட்டங்களை யூ.டி.ஐ. கைவிடத் தொடங்கியது.

யூ.டி.ஐயில் ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு பங்குச் சந்தை மந்தை மட்டும் காரணமல்ல, யூ.டி.ஐ. செய்த மிகத் தவறானமுதலீடுகள், மோசடி நபர்களுக்கு பணத்தைக் கொடுத்தது ஆகியவை தான் முக்கியக் காரணம் என்று குற்றச்சாட்டுகள்எழுந்தன.

யு.எஸ.-64 பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஜூன் 2ம் தேதி யு.எஸ்.-64 பங்குகள்மீதான வர்த்தகத்தை நிறுத்துவதாக யூ.டி.ஐ. அறிவித்தது. ஏற்கனவே, பெயர் கெட்டுப் போயிருந்த யூ.டி.ஐக்கு இந்தஅறிவிப்பு இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

யு.எஸ்.- 64 பங்குகள் விலை வீழ்ச்சிக்கு யூ.டி.ஐயின் தவறான செயல்பாடு தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. யூ.டி.ஐயில் உள்ள பொது மக்களின் முதலீடுகள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளன என்றஅச்சமும் முதலீட்டாளர்களிடம் பரவியது.

இதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க் கட்சிகளும் கேள்வி மேல்கேள்வி கேட்டன. ஆனால், யஷ்வந்த் சின்ஹா வழக்கம்போல் மழுப்பினார்.

என்னிடம் ஆலோசிக்காமலேயே யூ.டி.ஐ. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றார். ஆனால், அதை யாரும்நம்பவில்லை. இந் நிலையில் ஜூலை 4ம் தேதி யூ.டி.ஐ. தலைவர் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமாசெய்தார். அவரை பதவி விலகுமாறு மத்திய அரசு நெருக்கியதாகவும் தகவல் உள்ளது.

ஜூலை 9ம் தேதி யூ.டி.ஐ. நிர்வாகிகக் குழு கூடி யு.எஸ்-64 பங்குகள் குறித்து விவாதித்தது. ஆனால், எந்த முடிவும்எடுக்கவில்லை.

யு.எஸ்.-64 பங்குகள் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும்முன்னாள் நிதியமைச்சருமான மன்மோகன் சிங் கோரினார். யூ.டி.ஐக்கு எதிராக பல வழக்குகளும் தாக்கல்செய்யப்பட்டன.

ஜூலை 15ம் தேதி யூ.டி.ஐ. தலைவராக தாமோதரன் நியமிக்கப்பட்டார். அவர் எடுத்த முடிவின்படி யு.எஸ்-64பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து யூ.டி.ஐயே திரும்ப வாங்கிக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், இந்த பங்குகளுக்கு யூ.டி.ஐ. மிகக் குறைந்த விலை நிர்ணயித்தது கடும் ஆட்சேபத்தைக் கிளப்பியது.

இந்த நிலையில் தான் ஜூன் 20ம் தேதி முன்னாள் யூ.டி.ஐ. தலைவர் சுப்பிரமணியன் வீட்டில் சி.பி.ஐ. விசாரணைநடத்தியது. அடுத்த நாள் அவர் கைது செய்யப்பட்டார்.

சுப்பிரமணியத்துக்கு ஜாமீன் கேட்டு வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பேசுகையில், நிதியமைச்சர் யஷ்வந்த்சின்ஹா மீது குற்றம் சாட்டினார். சின்ஹாவின் நெருக்குதலால் தான் யு.எஸ்-64 பங்குகளின் செயல்பாட்டைசுப்பிரமணியம் நிறுத்தி வைத்ததாகவும், யூ.டி.ஐயின் செயல்பாட்டில் நிதியமைச்சர் பலமுறை தலையிட்டுள்ளார்எனவும், யூ.டி.ஐ. எடுத்த பல நடவடிக்கைகளுக்கு யஷ்வந்த் சின்ஹாவின் நெருக்குதல் தான் காரணம் எனவும்தெரிவித்தார்.

இதையடுத்து சின்ஹா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், அவரை விட்டுத் தரமுடியாது என பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.

இந்த நிலையில் தான் நேற்று (30ம் தேதி) சிவசேனை ஒரு குண்டைப் போட்டது. யூ.டி.ஐயின் பங்கு ஊழல்களில்பிரதமர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளசிவசேனைக் கட்சி.

பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒருவருடன் யூ.டி.ஐ. தலைவராக இருந்த சுப்பிரமணியம் பல முறை தொடர்புகொண்டு பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது கூட்டணிக் கட்சியே தன் மீது குற்றம் சாட்டியதால் வெறுத்துப்போன வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமாசெய்வதாக இன்று (31ம் தேதி) நடந்த பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

யூ.டி.ஐ. பங்கு ஊழலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நாடாளுமன்றத்தில் யஷ்வந்த் சின்ஹாவிளக்கமளிக்க முயன்றார். ஆனால், அவரை எதிர்க் கட்சிகள் பேசவிடவில்லை. இதனால், பாதியிலேயே தனதுஉரையை முடித்துக் கொண்டு கோபமாக வெளியேறினார் சின்ஹா.

சின்ஹா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க் கட்சிகள் அமளி செய்ததால், நாடாளுமன்றம்ஒத்திவைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சில பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களும் யூ.டி.ஐயின் நிதி விவகாரங்களில்தலையிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிராடு நிறுவனத்தில் பா.ஜ.க.தலைவர்களின் நெருக்குதல் காரணமாக யூ.டி.ஐ. முதலீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சைபர்ஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலன் யூ.டி.ஐக்கு ரூ. 32 கோடிநஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யூ.டி.ஐ. ஊழல் பிரதமரையே ராஜினாமா செய்ய வைக்கும் அளவுக்கு பூதகரமாக உருவெடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X