For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசை உலுக்கும் யூ.டி.ஐ. ஊழல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (யூ.டி.ஐ.) ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளதாக சிவசேனைக்கட்சி குற்றம் சாட்டியதையடுத்தே தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது யு.எஸ்-64 பங்குகளின் செயல்பாட்டை நிறுத்து வைப்பதாக யூ.டி.ஐ. நிறுவனம் அறிவித்தது.இதனால் இந்த பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாத நிலை உருவானது.

அரசு நிறுவனமான யூ.டி.ஐயின் இந்த அறிவிப்பு குறித்து தனக்குக் கூட பத்திரிக்கைகள் மூலம் தான் செய்திதெரியும் என மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார். ஆனால், இதில் பின்னணியில் ஏதோ பெரியஊழல் நடந்திருக்கிறது என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

மேலும் யூ.டி.ஐ. நிறுவனம் பல மோசடி நிறுவனங்களில் நிதி முதலீடு செய்துள்ள விவரமும் தெரியவந்தது. குறிப்பாகசைபர்ஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் ரூ. 64 கோடியளவுக்கு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மிகப்பெரிய மோசடி நிறுவனம் என்று தெரிந்தும் இதில் பணத்தை யூ.டி.ஐ. முதலீடு செய்தது.

ஆனால், இது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார். இதை நம்பத் தயாராகஇல்லாத எதிர்க் கட்சிகள் யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி வருகின்றன.

இந் நிலையில் இரு வாரங்களுக்கு முன் யூ.டி.ஐயின் தலைவர் சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்தது மத்தியஅரசு. அவரது வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சைபர்ஸ்பேஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சில மூத்த பா.ஜ.க.தலைவரகளுக்கும் தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் யூ.டி.ஐ. ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கே நேரடித் தொடர்புள்ளதாக தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள சிவசேனைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க் கட்சிகள் கூட சொல்லாத ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டை சிவசேனை கூறியுள்ளது.

இதையடுத்து இது குறித்து விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) பாரதீய ஜனதா கட்சியின் எம்.பிக்கள் கூட்டம்டெல்லியில் அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் பேசிய வாஜ்பாய், கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையாகவைத்திருக்க நான் தவறிவிட்டேன். எனவே, ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X