For Daily Alerts
Just In
சென்னையில் மின்சாரக் கம்பியை மிதித்த 2 பேர் சாவு
சென்னை:
சென்னை-கிண்டியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த 2 வாட்ச்மேன்கள்பரிதாபமாக இறந்தனர்.
இங்குள்ள தனியார் தொழில் நிறுவனம் ஒன்றில் வீரவேல், ராம் ஆகிய 2 பேரும் வாட்ச்மேன்களாக பணியாற்றிவந்தனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் அந்நிறுவனத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியிருந்தது. இந்தநீரில் புதன்கிழமை அதிகாலை மின்சார வயர் அறுந்து விழுந்துள்ளது.
இதைக் கவனிக்காத 2 வாட்ச்மேன்களும் அதை மிதித்துள்ளனர். அவர்கள் 2 பேரும் மின்சாரம் பாய்ந்து அந்தஇடத்திலேயே இறந்தனர்.