For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபரேஷன் வெற்றி: மூப்பனார் உடல்நிலை தேருகிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் ஆபரேஷன் செய்யப்பட்ட பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாககட்சியின் பொருளாளர் சுதர்சனம் கூறினார்.

சமீப காலமாக மூப்பனார் உடல்நிலை சரியில்லமால் இருந்தார். மேலும் அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவுஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, தற்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகமூப்பனாரின் நெருங்கிய நண்பரும் கட்சியின் பொருளாளருமான சுதர்சனம் நிருபர்களிடம் தெரிவித்ததார்.

டாக்டர்கள் தலைவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், 3 வாரத்திற்கு அவருக்கு ஓய்வுதேவை என்பதால், கட்சித் தொண்டர்கள் யாரும் தலைவரைப் பார்க்க வர வேண்டாம் என்றும் சுதர்சனம் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X