ராஜினாமா செய்வதாக சொன்னது ஏன்?- ராஜ்யசபையில் எதிர்கட்சிகள் அமளி
டெல்லி:
யு.டி.ஐ. விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ள வாஜ்பாய் முன்னதாகராஜினாமா செய்வதாக அறிவித்தது ஏன் என்று கேட்டு ராஜ்யசபாவில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில்ஈடுபட்டன.
ஆனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் விளக்கமளிக்க வேண்டும். மேலும்வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
இதனால் சபையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனையடுத்து பிரதமர் வாஜ்பாய் லோக்சபாவில் பேசினார்.அப்போது அவர், எனது அலுவலகத்துக்கும் யு.டி.ஐ. பங்குகளை வாங்கிய விவகாரத்திற்கும் தொடர்பில்லை.ஆனால் தேவைப்பட்டால் இது பற்றி விசாரிக்கப்படும் என்றார்.
ஆனால், ராஜ்யசபாவுக்கு வாஜ்பாய் வரவில்லை,.
இதையடுத்து வாஜ்பாய் ராஜ்யசபைக்கு வந்து, தான் ராஜினாமா செய்யப்போவதாக சொன்னது பற்றி விளக்கம்அளிக்கவேண்டும் என்று சபையின் எதிர்கட்சித் தலைவர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்தஉறுப்பினர் சுரேஷ் பச்செளரி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் வாஜ்பாய் லோக்சபாவில் மட்டும் இதுபற்றி விளக்கம் அளித்து விட்டு ராஜ்யபாவில் அதைப்பற்றி விளக்கம்அளிக்காதது பாரபட்சமான செயல் என்று பச்செளரி குற்றம் சாட்டினார். இதற்கப பா.ஜ.க. உறுப்பினர்கள் எதிர்விளக்கம் அளிக்க இரு தரப்பினரும் பலமாக வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதனால், அங்கு பெரும் அமளி ஏற்பட்டது.