For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் சிசுக் கொலையில் முதலிடம் வகிக்கும் தர்மபுரி

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரியில் கடந்த 2 ஆண்டுகளில் 650 பெண் சிசுக்கள் கொலை செய்யப்பட்டுள்ளன.


இதன் மூலம் தமிழ்நாட்டில் உசிலம்பட்டி வகித்து வந்த இடத்தை தர்மபுரியும் பிடித்துவிட்டது.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பெண்மையைப் போற்றும் இந்நாட்டில் பெண் என்றாலெ பெருஞ்சுமை என்றுகருதி அதை அழிப்பதில் சிலர் அக்கரை காட்டிவருகிறார்கள்.

முன்பெல்லாம் பெண்ணாகப் பிறந்தபின் எருக்கலைப்பாலையோ, நெல்லின் உமியையோ கொடுத்து அந்தப்பிஞ்சுப்பெண்ணின் உயிரைப் பறித்தார்கள். இப்போது ஒரு படி மேலேபோய், கருவறையிலேயே அதைத்தேடிப்பிடித்து அழிக்கும் அவலத்தைக் கற்றுக் கொண்டார்கள்.

ஆணா, பெண்ணா என்று அறியப் பயன்பட்ட விஞ்ஞானம் நாளடைவில் அழிக்கப் பயன்படுவதுதான்அவலத்திலும் அவலம்.

பல நூற்றாண்டு காலமாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற வரதட்சணை எனும் வங்கொடுமைதான் இந்தஅநியாயத்திற்கெல்லாம் அடித்தளம்.

ஏழைகளுக்காக வாழ்ந்த அன்னைதெரசா முதல் வின்னில் சாகசம் புரிந்த கல்பனா சாவ்லா வரை பெண்ணினம்செய்யாத சாதனைகளே இல்லை என்பதை அறிவார்களா அந்த மானிடர்கள்?.

பெண்கள் வளர்ந்து சாதிக்கவும் வேண்டாம் எங்களைச் சோதிக்கவும் வேண்டாம் என்று எண்ணிவிட்டார்கள்போலும்.

மூதாட்டிகளின் கையில் சிக்கி....

இதில் இன்னொரு விஷயம், பெண்களைப் பெண்களே அழிக்கும் இந்த அநியாயத்தை பெரும்பாலும் வயதுமுதிர்ந்த மூதாட்டிகள் தான் அரங்கேற்றுகிறார்கள்.

தாம் நடத்தப் போகும் தீஞ்செயலை வீட்டிலிருக்கும் மற்ற ஆண்களுக்கு அரசல் புரசலாகத்தெரியப்படுத்துகிறார்கள்.

அவரிடம் நேரில் சொன்னாலும், அவர் ஒன்றும் "பாரதி"யாக மாறித் தடுத்துவிடப் போவதில்லை. அதனால் அவர்குறிப்பறிந்து "குடிமகன்" ஆகப் போய்விடுவார் (சோகமாய் இருக்க வேண்டுமாம்.. அதற்காக தண்ணி அடிக்கப்போய்விடுவார்).

பிறகு, விஷத்தையோ, தொண்டையில் சிக்கி மூச்சு முட்டு வைக்கும் நெல் மணியையோ, எருக்கம் பாலையோஇந்தக் கிழவிகள் அந்த பிஞ்சுகளின் வாயில் போடுவார்கள். சில மணித் துணிகளில் அந்த சிசு துள்ளித் துடித்துசாகும்.

அன்று முதல் இன்று வரை இந்த இழிசெயலில் ஓகோ என்று விளங்கும் உசிலம்பட்டியை, தர்மபுரி மாவட்டம்வென்று வருவது தான் நெஞ்சை அடைக்கிறது.

ஆம், கடந்த 1999 முதல் 2001 வரை 2 ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் மட்டும் 650 பச்சிளங் குழந்தைகள்பலியாகியுள்ளனர்.

கொல்லப்பட இருந்த பல குழந்தைகளை மாவட்ட நிர்வாகமும் தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து பெற்றோரிடம்இருந்து மீட்டு காப்பாற்றவும் முயன்று வருகின்றன. இவர்களது முயற்சி பல நேரங்களில் வெற்றி பெறுவதில்லை.

சுமார் 46 குழந்தைகளை தொட்டில் குழந்தைகள் திட்டம் மூலமும் வேறு திட்டங்கள் மூலமும் இந்த மாவட்டஅதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். இவர்களின் முயற்சிகளையும் மீறி 650 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன.

இந்த 46 குழந்தைகளும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கான பள்ளியில்சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தனர்.

இதில் 15 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களே மீண்டும் ஏற்றுக் கொண்டது தான் மிகுந்த மகிழ்ச்சியானவிஷயம். பிற குழந்தைகள் தொடர்ந்து இந்தப் பள்ளியில் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X