For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"காதல் வைரஸ்" ஷூட்டிங்கில் ராட்சத பலூன் வெடித்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடந்த சினிமா படப்பிடிப்பில் ராட்சத பலூன் மோதி டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இந்த விபத்தில்சினிமா உதவி டைரக்டர் உள்ளிட்ட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதயம், உழவன், காதல்தேசம்,காதலர் தினம் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் கதிர். இவர்தற்போது "காதல் வைரஸ்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இந்த படத்தில் ஹீரோவும், ஹீரோயினும்கலந்து கொள்ளும் பாடல் காட்சி சென்னை அண்ணாசாலையில் நடைபெற இருந்தது. அந்தப் பாடல் காட்சியில்ஹீரோவும், ஹீரோயினும் ராட்சத பலூனில் பறந்தபடிநடிக்கும் காட்சி படம் பிடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கான ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக சென்னை தியாகராயநகர் அலுவலகத்தில் இருந்துடெல்லியைச் சேர்ந்த பலூனில் குளோப் அப் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ராட்சத பலூனில் "காதல்வைரஸ்" படத்தின் உதவி டைரக்டர் ஜேக்கப், காமிரா மேன் ராஜீவ், பலூனின் ஓட்டுனர் ராஜு ஆகியோர் உயரேபறந்து சென்றனர்.

அவர்கள் தங்கள் திட்டப்படி முக்கிய இடங்களை காமிரா மூலம் படம் எடுத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில்காற்று பலமாக அடித்ததால் பலூன் கட்டுப்பாட்டை இழந்து வட சென்னையை நோக்கி பறக்க தொடங்கியது.எங்காவது காலியான இடத்தில் பலூனை இறக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.

ஆனால் அதற்குள் பலூனில் கேஸ் தீர்ந்துவிட்டது. இதன் காரணமாக தண்டையார்பேட்டையில் உள்ள ஒருஉயரமான கட்டிடத்தில் பலூன் மோதியது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் நிலை தடுமாறினர். பிறகு, அருகேஇருந்த டிரான்ஸ்பார்மர் மீது பலூன் மோதியதால், டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதனால் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. பலூனும் வெடித்துச் சிதறியது. ஆனால், படப்பிடிப்புக் குழுவினர்மின்சார கம்பிகளை பிடித்துக் கொண்டு உயிர் தப்பினர்.

பலத்த சத்ததைக் கேட்ட பொதுமக்கள், படப்பிடிப்புக் குழுவினரை தீவிரவாதிகள் என நினைத்து போலீசுக்கு தகவல்தெரிவித்தனர். சென்னை போலீஸ் இணை கமிஷனர் வரதராஜ், வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் விட்டல்ராமன் மற்றும் மின்சார வாரியத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் வந்த பிறகே பலூன் வெடித்த விபத்தில் சிக்கயவர்கள் படப்பிடிப்பு குழுவினர் என்று தெரிய வந்தது.போலீசார் அவர்களை காப்பாற்றி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து புது வண்ணாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அனுமதி பெற்றுபடப்பிடிப்பு நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X