For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிக்கையாளர்கள் இறந்தால் ரூ. 2 லட்சம் உதவித் தொகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ. 50,000லிருந்து ரூ. 2 லட்சமாகஅதிகரிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவரம்:

பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ. 50,000லிருந்து ரூ. 2 லட்சமாகஅதிகரிக்கப்படும்.

20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற, அங்கீகரிக்கப்படாத பத்திரிக்கையாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கத் திட்டம்கொண்டு வரப்படும்.

தமிழக வீட்டு வசதி வாரியம் கட்டியுள்ள வீடுகளை தவணை முறையில் வாங்க பத்திரிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமானதிட்டம் அறிவிக்கப்படும்.

ரேஷன் வினியோகத்தில் காணப்படும் முறைகேடுகளைக் களையவும், கண்காணிக்கவும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுக்கள்அமைக்கப்படும். வள்ளலார் போன்ற தமிழறிஞர்கள் பெயரில் விருதுகள் ஏற்படுத்தப்படும்.

இயல், இசை, நாடக வளர்ச்சிக்கு நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படும். இந்துக் கோவில்களில் குறைந்தபட்சம் ஒரு காலபூஜையாவது நடத்த நிதியுதவி அளிக்கப்படும்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் மலையில் புதிதாக கேபிள் கார் அறிமுகப்படுத்தப்படும். பழனி மலையைச்சுற்றிலும், திருவண்ணாமலையில் உள்ளது போல பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக கிரிவலப் பாதை அமைக்கப்படும்.

காவல்துறையை அதி நவீனமாக்க ரூ. 107.51 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தமிழகத்தில் உள்ள 187காவல் நிலையக் கோட்டங்களில் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்க திட்டம்.

நடப்பு ஆண்டில் ரூ. 3 கோடி மதிப்பில் 50 மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். அனைத்துக் காவல் நிலையங்களிலும் ரூ.25 கோடி செலவில் ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர், இரண்டு பெண் காவலர்களை நியமிக்கப்படுவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X