For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

35 அடி குழியில் விழுந்த சிறுவன் மரணம்: உடல் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை-மண்ணடியில் உள்ள ஆடியபாதம் தெருவில் 35 அடி பள்ளத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை விழுந்தசிறுவன் தமிழ்மணியை உயிருடன் மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை 4 மணிக்கு சிறுவனின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது.

தமிழ்மணியை எப்படியும் உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக, போலீசார், தீயணைப்புப் படையினர்,பொதுமக்கள் என்று நூற்றுக் கணக்கான பேர் சுமார் 60 மணி நேரம் போராடியும், அவனை உயிருடன் மீட்கமுடியாமல் போய்விட்டது. இதையடுத்து, அப்பகுதி மட்டுமில்லாமல் சென்னை மாநகரமே சோகத்தில்ஆழ்ந்துள்ளது.

குழியில் விழுந்த சிறுவன்

சென்னை துறைமுகம் பகுதி 4வது தெருவில் வசித்து வரும் குமார்-நூர்ஜகான் தம்பதியின் மகன் தமிழ்மணி (வயது5). இந்த சிறுவன் கடந்த வியாழக்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

ஆடியபாதம் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடதிற்கு அருகே போர்வெல் போடும் பணிக்காக பெரும்பள்ளம் தோண்ப்பட்டிருந்தது. அதன் ஆழம் 60 அடி. விட்டம் ஒன்றறை அடிதான். பள்ளத்தை தோண்டிகொண்டிருந்த பணியாளர்கள் அலட்சியமாக பள்ளத்தை பேப்பர் போட்டு மூடிவிட்டு சாப்பிடப் போய்விட்டனர்.

அவ்வழியாக வந்து கொண்டிருந்த தமிழ்மணி, பேப்பர் போட்டு மூடப்பட்டிருந்த பள்ளத்தின் மேலிருந்த பேப்பரில்கால் வைத்தவுடன் பேப்பர் கிழிந்து பள்ளத்தில் விழுந்தான். 35 அடி ஆழத்தில் அந்த இளம் சிறுவன் சிக்கிக்கொண்டான்.

மீட்பு நடவடிக்கை தீவிரம் - அமைச்சர்கள் விரைவு

அந்த சிறுவனை மீட்க தீயணைப்பு வீரர்கள் உதவி நாடப்பட்டது. வெள்ளிக்கிழமை தீயணைப்பு வீரர்களுடன்,ராணுவம், கடலோர காவல்படையினர், போலீஸ், அந்த பகுதியில் இருக்கும் இளைஞர் குழு அனைவரும்ஈடுபட்டனர்.

இந்நிலையில் முதல்வரின் ஆணையின் பேரில் இரண்டு அமைச்சர்களும், ஒரு எம்.எல்.ஏவும் மீட்பு பணியைதீவிரப்படுத்தும் பணிக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனியாரி கம்பெனி ஒன்றின் ஆலோசனைப்படி, சிறுவன் விழுந்திருந்த பள்ளத்திற்கு 8 அடி தொலைவில் மற்றொருபள்ளம் தோண்டப்பட்டு அதில் துளை போட்டு சிறுவனை மீட்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

மாண்டு போன சிறுவன் - பெற்றோர் கதறல்

நேரம் ஆக ஆக தமிழ்மணி உயிருடன் மீட்கப்படுவானா என்ற சந்தேகம் வலுத்து வந்த நிலையில், புதிதாகதோண்டப்பள்ளத்தில் போட்ட துளையின் வழியாக உள்ளே சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சென்ற மீட்புகுழுவினர் அதிர்ந்து போனார்கள்.

அங்கே கைகளை தூக்கிய வண்ணம் அந்த இளம் சிறுவன் கண் மூடி மீளாத்துயிலில் ஆழ்ந்து கிடந்தான். வேதனைநெஞ்சை முட்ட, கனத்த இதயத்துடன் இறந்து போன அந்த சிறுவனின் உடலை மேலே கொண்டு வந்தனர்.

தன் மகனின் இறந்து உடலை கண்ட அவனது பெற்றோர், "எங்கள் மகனை பாருங்கள், பாருங்கள் என்று கதறியதுகாண்போர் மனத்தை கரைத்தது.

முதல்வர் இரங்கல் - ரூ.1 லட்சம் நிதியுதவி

இறந்து போன .சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ 1 லட்சம் வழங்குமாறுமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ார்.

சிறுவனின் மரணம் தன்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருப்பதாக கூறிய முதல்வர் தமிழ் மணியின்பெற்றோருக்கு தன் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்வர் ராஜா ஆகியோர் சிறுவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.

போர்வெல் கான்ட்ராக்டர் கைது

இந்நிலையில் சிறுவனின் உயிரை குடித்த போர்வெல் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த கான்டிராக்டரைபோலீசார் கைது செய்துள்ளனர்.

அலட்சியமாக குழியின் மேல் பள்ளத்தை பேப்பர் போட்டு மூடிவிட்டு சென்ற ஊழியர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் சென்னை நகரில் இது போல் ஏதேனும் போர்வெல் தோண்டப்படுகின்றனவா என்று போலீசார்சோதனையிட்டு வருகின்றனர்.

தமிழ்மணியின் சாவு போல் எதுவும் இனியும் நடந்துவிடக்கூடாது என்பதில் போலீசாார் கண்ணும் கருத்துமாகஉள்ளனர். அதற்கான பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X