For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா நடவடிக்கை... தமாகா அதிர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சத்தியமூர்த்தி பவனை காங்கிரஸ் கட்சி கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ள சூழ்நிலையில் அப்படி நடந்தால்,காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது கடினம் என்று தமாகா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ்கட்சி உருவானது. காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட தேர்தல்கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாட்டின் காரணமாக மறைந்த மூப்பனார் தலைமையில் இக்கட்சி உருவானது.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை அதிரடியாக கைப்பற்றி தமாகாவுக்குசொந்தமாக்கினார் மூப்பனார். இதனால் காங்கிரஸ் கட்சி, அலுவலகம் இல்லாத கட்சியானது. சத்தியமூர்த்தி பவன்மட்டுமல்லாது தமிழக காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காமராஜர் பவன், காமராஜர் மைதானம், காமராஜர்அரங்கம் ஆகியவற்றையும் மூப்பனார் கைப்பற்றினார்.

காங்கிரஸ் அறக்கட்டளையில் மூப்பனார் மற்றும் இரண்டு பேர் மட்டுமே அறங்காவலர்களாக அப்போதுஇருந்தனர். இதனால் அவர்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்த சொத்துக்களை மூப்பனார் கைப்பற்றினார்.

அதன் பிறகு சத்தியமூர்த்தி பவனை மீட்க காங்கிரஸ் கட்சியினர் பெரியஅளவில் நடவடிக்கை ஏதும்எடுக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மூப்பனார் மரணமடைந்தார்.

இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனை காங்கிரஸ் கட்சிமீண்டும் மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்பகாங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட 5 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.ஜெயந்தியைத் தவிர மற்ற நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் தலைவர்இளங்கோவனும் இதில் அடக்கம்.

சத்தியமூர்த்தி பவனை தங்கள் வசம் மீண்டும் கொண்டு வரும் பொருட்டே இந்த அறங்காவலர் குழுவை சோனியாநியமித்துள்ளதாக தமாகா வட்டாரத்தில் கருதப்படுகிறது.

சோனியாவின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ள தமாகவினர்,முழுக்க முழுக்ககாங்கிரஸ்காரர்களைக் கொண்ட இந்தக் குழுவினால், தங்கள் வசம் உள்ள காங்கிரஸ் சொத்துக்கள் பறிபோகும்என்றும் அஞ்சுகிறார்கள்.

தமாகா புதிய தலைவராக மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன் பொறுப்பேற்றுள்ள அடுத்த நாளே சோனியா காந்திஇப்படி அதிரடியாக நடவடிக்கை எடுத்திருப்பது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உள்ளது.

தமாகா இனி இல்லை என்ற உணர்வை காங்கிரஸ் காரர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று தமாகாவினர்கருதுகின்றனர். இதனால் தமாகவினர் கொதித்துப் போயுள்ளனர்.

சத்தியமூர்த்தி பவனை எப்பாடு பட்டாவது கை நழுவிப் போய்விடாமல் பார்த்துக் கொள்வது என்ற முடிவில்தமாகாவினர் உள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை மேற்கொள்ள கோவிந்தவாசன்தயக்கம் காட்டுகிறார்.

இதனால் தமாகா வசம் சத்தியமூர்த்தி பவன் இருக்குமா அல்லது காங்கிரஸ் அதை மீண்டும் மீட்குமா என்பதுஇன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X