For Daily Alerts
காவிரிப் பிரச்சனை: தமிழக அரசைக் கண்டித்து பா.ம.க. பேரணி
சென்னை:
காவிரி நீர்ப்பிரச்சனையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மயிலாடுதுறையில் பா.ம.க. சார்பில்வரும் 9ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
காவிரி டெல்டாப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டது. மேலும்கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைப் பெறுவதிலுங்ம தமிழக அரசு மெத்தனப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.
இதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வரும் 9ம் தேதி பா.ம.க. சார்பில் மாபெரும் கண்டனப் பேரணிநடத்தப்படுகிறது.
இந்தப் பேரணியில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வார் என்று அந்த அறிக்கையில்மணி கூறியுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!