For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காலராத் தொல்லை தமிழ்நாட்டில் இல்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் காலரா நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை நேற்று(வெள்ளிக்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காலரா நோயால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் காலரா நோயால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாக முன்மாதிரி வழக்கம் இல்லை. மேலும்நடப்பாண்டில் காலராவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்வர் ஒருவர் தான்.

2000-2001ம் ஆண்டில் காலரா முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. கிராமங்களில் இதற்காகவிழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

காய்ச்சி வடிகட்டிய குடிநீரைத் தான் பருகவேண்டும் என்பது போன்ற வழிமுறைகள் கிராம மக்களுக்கு எடுத்துச்சொல்லப்பட்டு வருகின்றன என்று செம்மலை கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X