For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை தெரியவில்லை

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

தாக்குதலுக்குள்ளான உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து வந்த இந்தியர்களில் எத்தனை பேர் இறந்துபோனார்கள் என்று இதுவரை தெரிய வரவில்லை.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் (இந்திய நேரம் மாலை 6 மணி) நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தகமையம் மீது, கடத்தப்பட்ட ஒரு விமானம் மோதப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே மற்றொரு விமானம்உலக வர்த்தக மையம் மீது இரண்டாவது தாக்குதல் நடத்தியது. இதில், 2வதாகத் தாக்கப்பட்ட, 110 மாடிகளைக்கொண்ட உலக வர்த்தக மையக் கட்டிடம் தரைமட்டமாகியது.

உலக வர்த்தக மையத்தில் 50,000 பேர் வரை பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் 10 முதல் 15 சதவிகிதம் பேர்இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த போது, 20,000 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

விமானத் தாக்குதல் நடைபெற்ற போது உலக வர்த்த மையத்தில் எத்தனை இந்தியர்கள் பணிபுரிந்தார்கள் என்றுதெரியவில்லை.

கட்டிடம் தரைமட்டமாகி விட்டதால் அங்கு பணிபுரிந்த எத்தனை பேர் இறந்து போனார்கள் என்பது இன்னமும்தெரியவரவில்லை. அதே போல் எத்தனை இந்தியர்கள் இறந்து போனார்கள் என்பதும் தெரியவில்லை.

நியூயார்க் நகரில் மட்டும் 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள்தாக்குதலுக்கு உள்ளாகி தரைமட்டமாகியுள்ள உலக வர்த்தக மைய கட்டிட பகுதியிலும், அதைச் சுற்றியுளள் வால்ஸ்டிரீட் பகுதியிலும் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X