For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் மழை நீடிக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் 2வது நாளாக செவ்வாய்க்கிழமை இரவும் மழை பெய்தது.

சென்னையில் திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் பலத்த மழை பெய்தது. திடீரென பெய்த இந்த கன மழையால்சென்னை நகர் முழுவதும் மழை நீரில் மூழ்கியது.

நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை மேலும் ஒரு நாளைக்கு நீடிக்கும் என்றும், இது சாதாரண மழைதான் என்றும் புயல் அபாயம் எதுவும்இல்லை என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியிருந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவிலும் நகர் முழுவதிலும் மழை பெய்தது. இருப்பினும் சாதாரணஅளவிலேயே மழை இருந்தது.

புதன்கிழமை காலையிலும் வெயிலைக் காண முடியவில்லை. வானம் மேக மூட்டமாகவே உள்ளது. காலையிலும்மழை பெய்யலாம் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X