For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மு.க. முத்து வீட்டில் தீ விபத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. முத்துவின் வீ"ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அவருடையகுடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை கோபாலபுரம் 4வது தெருவில் முத்துவின் வீடு உள்ளது. 3 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் மாடியில்கூரைக் கொட்டகை ஒன்றும் உள்ளது.

புதன்கிழமை இரவு இங்கு திடீரென்று தீப்பிடித்தது. மளமளவென்று இந்த தீ வீடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த 2 தீயணைப்பு வண்டிகள்மூலம், போராடி தீயை அணைத்தனர் தீயணைப்பு வீரர்கள்.

மின் கசிவு காரணமாகத்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X