For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு உதவ பாகிஸ்தானுக்கு தீவிரவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பின் லேடனைப் பிடிக்க அமெரிக்காவுக்கு உதவினால் கடும் விளைவுகள் ஏற்படும் என பாகிஸ்தானில் உள்ளதீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் அரசை மிரட்டியுள்ளன.

லக்ஷர்-ஏ-தெய்பா தீவிரவாத அமைப்பின் வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தான் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் தோளோடு தோள் நின்று உதவ வேண்டும். அமெரிக்காவுக்குஎல்லா உதவிகளையும் செய்வோம் என பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளது முதுகில் குத்துவதற்குசமமானது.

இது பாகிஸ்தானின் விவகாரங்களில் வெளிநாட்டை தலையிட அனுமதிப்பது போல் ஆகிவிடும்.

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவை எதிர்த்து அனைத்து முஜாகிதீன்களும் போர்தொடுப்போம். ஆப்கானுக்கு உதவுவோம்.

இஸ்லாம் எப்போதும் தீவிரவாதத்தை அனுமதித்ததில்லை. ஆனால், தீவரவாதத்துக்கும் மதப்போருக்கும் உள்ளவித்தியாசத்தை அனைவரும் உணர வேண்டும். மதப் போரில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை யார் தடுத்தாலும்அவர்களைத் தாக்குவோம்.

காஷ்மீர் விடுவிக்கப்படும் வரை மதப் போர் நடக்கும். காஷ்மீரில் மட்டும் தான் மதப் போர் நடத்தி வருகிறோம்.நாங்கள் வேறு எங்கும் போர் நடத்தவில்லை.

இவ்வாறு அந்த வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன்:

அதே போல ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளம்பியுள்ளது.

ஹிஸபுல் முஜாகிதீன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவை பாகிஸ்தான் ஆதரிக்கவோ,அவர்களுக்கு உதவவோ கூடாது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கு எதிரான தீவிரவாத செயல்களில்அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

இப்போது அமெரிக்காவே தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மதப் போர் என்பது ஒருகொள்கைக்காக தொடுக்கப்படுவது. அதில் அப்பாவிகளைக் கொல்ல உரிமையில்லை. ஜிகாத் அமைப்புகள்எப்போதுமே அப்பாவிகளை குறி வைத்தது இல்லை.

ஹர்கத்-உல்-முஜாகிதீன்:

ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளரக் கூறுகையில்,

அமெரிக்காவுக்கு உதவுவதும் சாத்தான்களுக்கு உதவுவதும் ஒன்று தான் என்பதை மட்டும் பாகிஸ்தானுக்கு கூறவிரும்புகிறோம். அதற்கு மேல் ஏற்படும் விளைவுகளை சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும் எனமிரட்டியுள்ளது.

ஆப்கான் பாதுகாப்பு கவுன்சில்:

ஆப்கானிஸ்தான் மீது தாக்குல் நடத்த அமெரிக்காவுக்கு எந்த வகையிலாவது பாகிஸ்தான் உதவினால், அது முதுகில் குத்துவதற்கு சமம் எனஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்களின் ஒருங்கிணைப்புக் குழுவான ஆப்கன் பாதுகாப்புக் கவுன்சில் தலைவரான மெளலானாசமீயுல் ஹக் கூறுகையில்,

பாகிஸ்தான் அமெரிக்க போர் விமானங்கள் தனது வானில் பறக்க அனுமதிக்கக் கூடாது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவோம்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X