For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவுக்கு தீவிரவாதிகள் குறித்த ரகசிய தகவல்கள்: இந்தியா வழங்கியது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள அவர்களின் பயிற்சி மையங்கள் குறித்த ரகசிய தகவல்களைஅமெரிக்காவிடம் இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியாவின் அன்னிய உளவுப் பிரிவான ரா இந்தத் தகவல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பானஎப்.பி.ஐக்கு வழங்கியுள்ளது.

இதில் தலிபான்-பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சர்வதேச முகவரிகள், அவர்களுக்கு பண உதவி செய்து வரும்நபர்களின் விவரங்கள் ஆகியவை அடங்கும்.

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா வந்திருந்தபோது அவரைச் சந்தித்த உள்துறை அமைச்சர் அத்வானிபல ஆவணங்களைக் காட்டி, தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அதைநிறுத்துக் கொள்ளுமாறு கூறினார். இப்போது அந்த ஆவணங்களையும் தான் அமெரிக்காவிடமும் இந்தியாகொடுத்துள்ளது.

பின் லேடனிடம் பணம் பெற்று இந்தியாவில் இயங்கி வரும் தீவிரவாதிகள் குறித்த மிக ரகசியமானவிவரங்களையும் எப்.பி.ஐயிடம் இந்தியா தந்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் பிடிபட்ட சூடானைச் சேர்ந்த தீவிரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களும்தரப்பட்டுள்ளன. இவன் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு குண்டு வைக்க வந்தபோது பிடிபட்டான்.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, அதில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமுக்கும் பின்லேடன் கும்பலுக்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்த முக்கிய விவரங்களும் தரப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களில் ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட தீவிரவாதிகளின் வீடியோ படங்கள், புகைப்படங்கள்,சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தலிபான் மற்றும் பாகிஸ்தான் அளித்து வரும் தீவிரவாத பயிற்சிகள், பயிற்சிமையங்கள் ஆகியவற்றின் வீடியோ படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தீவிரவாத பயிற்சி முகாம்கள் குறித்தவிவரங்களையும் அமெரிக்காவிடம் இந்தியா வழங்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X