For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாறி வரும் மெரினா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாக் கடற்கரை நாளுக்கு நாள் அசுத்தமாகிக்கொண்டுள்ளது.

சென்னையில் உள்ள மெரினா பீச்சுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கிறார்கள். சென்னைவாசிகளைத் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகளும் இதில் அடக்கம்.

இவர்கள் தாங்கள் கொண்டுவரும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள், பேப்பர்கள், வாட்டர் பாட்டில்கள்போன்றவற்றைக் கண்ட இடங்களில் தூக்கி எறிந்து விடுகிறார்கள். இதனால் மணல்வெளி முழுவதும் ஒரேகுப்பைமேடாகிக் கொண்டுள்ளது.

இவை தவிர சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளின் மறைவில் அமர்ந்து மது அருந்துவிட்டு,பாட்டில்களை அப்படியே கடலுக்குள் தூக்கி வீசிவிட்டுச் செல்கிறார்கள். இதனால் கடலில் இருந்து ஒதுங்கும்சங்குகள், சோழிகளைவிட, பாட்டில்களே அதிக அளவில் காணப்படுகின்றன.

கடலில தான் அக்கம் பக்கத்தில் உள்ள குடிசை வாசிகள் தங்கள் எருமை மாடுகளைக் குளிப்பாட்டுகின்றனர்.இதனால் கடல் நீர் பெருமளவு அசுத்தமடைகிறது.

அதே போல ஆயிரக்கணக்கான சென்னைவாசிகளுக்கு இந்த கடற்கரை தான் திறந்த வெளிக் கழிப்பிடமாகவிளங்குகிறது. காற்று வாங்கிக் கொண்ட கடற்கரையை நாறடிப்பது இவர்கள் ஒரு பொது சேவையாகவே செய்துவருகின்றனர்.

இதை மாநகராட்சி நிர்வாகமோ, பொதுப்பணித்துறையோ கண்டுகொள்வதே இல்லை. சில தன்னார்வ தொண்டுநிறுவனங்கள்தான் அவ்வப்போது சுத்தப்படுத்துகின்றன. இதில் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் என்ற தன்னார்வத்தொண்டின் பணி பாராட்டத் தக்கது.

இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் நிர்வாகி நைனா ஷா கூறுகையில், மெரினா பீச் முற்றிலும் அசுத்தமாகிவிட்டது. இந்த நீரில் குளிப்பவர்களுக்கு தோல் வியாதிகள் ஏற்படுகின்றன.

அந்த அளவுக்கு பாட்டில்களும்,குப்பைகளும், மற்றும் சில அசுத்தங்களும் கடலுக்குள் நிறைந்துள்ளன. தற்போதுஇதைச் சுத்தப்படுத்த எங்கள் அமைப்பைப் போன்ற சில தன்னார்வ அமைப்புக்கள் முன்வந்துள்ளன என்றார்.

இதுகுறித்து கொல்கத்தாவிலிருந்து சுற்றுலா வந்துள்ள ஒரு இளம்பெண் கூறுகையில், நான் கொல்கத்தாவில் தான்இதுபோன்ற அசுத்தம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அழகான மெரினா பீச்சின் தற்போதையநிலைமை மிகவும் மோசம் என்றார்.

இதேபோல மற்றொரு சுற்றுலாப்பயணி கூறுகையில், மெரினா பீச்சும் கூவம் ஆறும் ஒன்றாகத் தான் எனக்குத்தெரிகிறது. இதையும் பலர் கழிப்பிடமாகவும், குப்பைத் தொட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள் என்றார்.

காலையில் உடற்பயிற்சி செய்யவும், ஜாக்கிங் செல்லவும் கடற்கரை பக்கமே ஒதுங்க முடியாத அளவுக்கு காலைக்கடன் ஆசாமிகள் தொல்லை அதிகரித்துவிட்டது.

இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பதவியில் இருப்பவர்களும் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடவும்,மாநாடுகள் நடத்தவும் மட்டுமே இங்கு வருகிறார்கள்.

உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்பட்டததாகத் தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X