For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரி 16ல் விண்ணில் பாய்கிறது இன்சாட்-3 சி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான இன்சாட்-3சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதிவிண்ணில் ஏவப்பட உள்ளது.

ஏரியன்-5 ராக்கெட் மூலம் இன்சாட்-3சி செயற்கைக் கோளை ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம் (இஸ்ரோ) இதற்கு முன் அறிவித்திருந்தது.

ஆனால், ஏரியன்-5 ராக்கெட் தயாரிப்பு இன்னும் முழுமையடையவில்லை என்பதால், ஏரியன்-4 ராக்கெட்டேஇந்தச் செயற்கைக் கோளை விண்ணுக்குச் சுமந்து செல்லவிருக்கிறது.

இதற்கு முன் ஏரியன்-5 ராக்கெட்டில் ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்தசெயற்கோளை ஏவும் திட்டம் பலமுறை தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வந்தது.

ஜெர்மனியில் 60 முறைக்கும் மேலாகவே ஏரியன்-5 ராக்கெட் சோதனை செய்யப்பட்டது. இன்னும் அதில் சிலபிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இவற்றைத் தீர்ப்பதற்கு வெகு நாட்களாகும் என்பதால், ஏரியன்-4 ராக்கெட்டைக் கொண்டே ஜனவரி 16ம் தேதிஇன்சாட்-3சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இன்சாட்-2சி செயற்கைக் கோள் விரைவில் செயலிழக்கவுள்ளது.

ஏரியன்-5 ராக்கெட்டைக் கொண்டு முன்னர் ஏவப்பட்ட ஒரு வெளி நாட்டு செயற்கைக் கோள் குறிப்பிட்ட வட்டப்பாதையை எட்ட முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X