For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாராய வியாபாரிகள்-போலீஸ் நல்லுறவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழத்தைப் பொறுத்தவரை போலீசாருக்குத் தெரியாமல் சாராயம் காய்ச்சப்படுவதே இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வரும் மாமூல் மிகப் பெரியது என்பதால் போலீசாரே பலரை சாராயம் காய்ச்ச தூண்டுவதும் உண்டு.கள்ளச் சாராய தொழிலை விட்டு வெளியே வர விரும்பிய பல ரெளடிகள் போலீசாரால் மீண்டும் அந்தத்தொழிலுக்கே அனுப்பப்படுவது வழக்கம் என்கின்றனர் போலீஸ்துறையைக் கண்காணிக்கும் பல நிருபர்கள்.

வழக்கமாக கள்ளச் சாராயத்தால் யாராவது உயிரிழந்தால் அந்தப் பகுதியின் காவல் நிலையத்தைச் சேர்ந்தகாவலர்களையும் அதிகாரிகளையும் சஸ்பெண்ட், டிரான்ஸ்பர் செய்துவிட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர்நிவாரண நிதியிலிருந்து சில ஆயிரங்கள் தந்து கதையை முடித்து விடுகிறார்கள்.

இந்த போலீசார் அடுத்த 3 அல்லது 6 மாதத்தில் வேலைக்கு வந்து வழக்கம்போல் மாமூல் வசூலில் ஈடுபடுகின்றனர்.

இதற்குப் பதிலாக போலீசார் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் சாராயச் சாவுகளைத் தடுக்கமுடியும். தவறு செய்யும் போலீசாரை பதவி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

அதே போல கள்ளச்சாராய குற்றவாளிகளை மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துதண்டித்தால் தான் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும்.

இப்போது பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் அதிக மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தைக் குடித்த 50 பேர் பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர். இந்த சாவுகளையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில அதிகாகள்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இவை மட்டும் எதிர்காலத்தில் கள்ளச்சாராயத்தைத் தடுத்து நிறுத்த போதுமானதா?

கள்ளச்சாராய சாவுகள் நிகழும்போதெல்லாம் போலீஸாரை இடமாற்றம் செய்வதும், சஸ்பெண்ட் செய்வதும் சடங்கு போலாகி விட்டதேஒழிய போலீஸாரும் திருந்தியதாக தெரியவில்லை, குடிப்பவர்களும் திருந்தியதாகத் தெரியவில்லை.

போலீஸாருக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவு அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது.

ஒரு கிராமத்தில் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால் அதை மறைகமாக தொடங்கி வைப்பது போலீஸ்தான். அந்தக் கிராமத்து காவல்(நிலையத்தின்) தெய்வங்கள் அனைத்திற்கும் முறையான பூஜைகள் (மாமூல்) செய்யப்பட்ட பிறகே சரக்கு சந்தைக்கு வருகிறது.

அதன் பிறகு கள்ளச்சாராய வியாபாரம் கொடி கட்டிப் பறக்க போலீஸாரே ஐடியாக்கள் கொடுத்து தாங்களும் உயருகிறார்கள், தங்களைநம்பியுள்ள கள்ளச்சாராய வியாபாரிகளையும் உயர்த்தி விடுகிறார்கள்.

கடலூரில் நத்தம் கிராமத்தில் சாராய சப்ளை செய்த முருகன் என்பவன் போலீஸாரின் உற்ற துணையுடன்தான் இந்த வியாபாரத்தை செய்துவந்துள்ளான். மதுவிலக்குப் பிரிவு போலீஸார் முதல் காவல் நிலைய போலீஸார் வரை அனைவரையும் நன்கு கவனித்துள்ளானாம் முருகன்.

இதனால், ஏதாவது ஒரு நியாயமான அதிகாரி திடீரென கள்ளச்சாராய ரெய்டுக்கு வருவதாகத் தெரிந்தால் முன்கூட்டியே முருகனுக்குத்தகவல் போய் விடுமாம். உடனடியாக உஷாராகி சரக்குகளை எங்காவது ஒளித்து வைத்து விடுவானாம்.

இந்தளவுக்கு போலீஸாரின் உறுதுணை இருந்தால் யாருக்குத்தான் கள்ளச்சாராயம் காய்ச்ச மனம் வராது.

நத்தம் மட்டுமல்லாமல் அருங்குணம், மனம் தவிழ்ந்தபுத்தூர், மேல் அருங்குணம், ராயர் பாளையம், பலாப்பட்டு ஆகிய கிராமங்கள்அனைத்திலும் முன்பு கள்ளச்சாாயம் கொடிகட்டிப் பறந்தது. இந்தக் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், வன்னியர்கள், செட்டியார்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த மக்களின் பிரதானத் தொழில் விவசாயம். அதிலும் இவர்களுக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. பிறர் நிலங்களில் விவசாயக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்கள். சிலர் செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். கூலிக்கேற்ற வகையில் குடிப்பழக்கமும்இவர்களுக்கு உண்டு. இதில், ஆண், பெண் பாகுபாடு கிடையாது. காசு இருந்தால் அவர் யாராக இருந்தாலும் குடிக்காமல் இருக்க மாட்டார்.

இதில் நத்தம் கிராமத்தைத் தவிர மற்ற கிராமங்களில் குடிப்பதற்குத் திடீரென ஊர் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து குடிமக்கள் தடுமாறத்தொடங்கினார்கள். இந் நிலையில் தான், நத்தம் கிராமத்திற்கு குடி மக்களின் வசதியை முன்னிட்டு சாராய வியாபாரிகள் இடம் பெயர்ந்தனர்.

சின்னப்பொன்னு, ஆனந்தாயி, கோவிந்தன், மாடசாமி, கேசவன் ஆகியோர்தான் ஏரியாக்கள் பிரித்து கள்ளச்சாராயத்தை விற்பனை செய்துவந்தவர்கள். இவர்களிடம் குடித்தவர்கள்தான் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்கள். இவர்களில் சின்னப்பிள்ளையும் சாராயம் குடித்துஇறந்து விட்டார்.

இந்த சாராய சாவுகள் நத்தம் மற்றும் அதன்சுற்று வட்டார கிராமத்தினரை உலுக்கி விட்டன. இனிமேலாவது கள்ளச்சாராய வியாபாரிகளைவேரோடு அழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாராயம் குடிக்காத பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல் கட்டமாக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுநல்ல குடிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X