For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின் லேடனுடன் முல்லா ஒமரையும் காணவில்லை

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

பின்லேடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் தலிபான் கூட்டத்தின் தலைவர்முல்லா ஒமரையும் காணவில்லை என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாகநடந்து வருகிறது.

இந்த இருவரும் காண்டஹாரைச் சுற்றியுள்ள குகைகளில் பதுங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டு வந்தது. இந்தநகரை பழங்குடிப் படைகளும் ஆப்கானிஸ்தான் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹமித் கர்சாய்தலைமையிலான படைகளும் கைப்பற்றிவிட்ட நிலையில் ஒமரையும் பின்லேடனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

குகைகளில் எல்லாம் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நகரின் அருகே உள்ள தோராபோரா மலைப் பகுதியில்பதுங்கியிருந்ததாகக் கருதப்படும் பின்லேடனையும் அங்கு காணவில்லை. இந்த மலையை கர்சாயின் படைகள்சல்லடைபோட்டு தேடி வருகின்றன.

இந்த நகரம் வீழ்ந்ததையடுத்து பின்லேடன் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்க வேண்டும் எனசந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சரணடையத் தயாராக உள்ளதாகக் கூறிய முல்லா ஒமர் எங்கே ஓடினார் என்றுதெரியவில்லை.

முல்லா ஒமர் பழங்குடிகளிடம் சரண்?

இந் நிலையில் காண்டஹாரில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நகரை ஹமித் கர்சாய் மற்றும் 2 பழங்குடிப்படைகள் தனித்தனியே கைப்பற்றியுள்ளன. இவர்கள் மூவரும் நகரின் வெவ்வெறு பகுதிகளை தங்கள்கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதில் முல்லா ஒமரைக் கைது செய்வதில் கர்சாய் தீவிரமாக உள்ளார். ஆனால், பிற பழங்குடிப் படைகள் ஒமருக்குபொதுமன்னிப்பு தரத் தயாராக உள்ளனர். இதனால், ஒமர் இவர்களிடம் சரணடைந்திருக்கலாம் என்றும், அவரைஇந்தப் படைகள் ரகசிய இடத்தில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

பென்டகன் அதிகாரி பேட்டி:

இது குறித்து பென்டகன் அதிகாரி டாமி பிராங்க் கூறுகையில்,

தலிபான் கூட்டமும், அவர்களின் தலைவர் முல்லா ஓமரும் சரணடைவதாக கூறியிருந்தனர். ஆனால் முல்லா ஓமர்மறைந்திருக்கும் இடம் தெரியவில்லை, மேலும் அவர் தப்பி ஓடிவிட்டாரா என்பதும் தெரியவில்லை.

அவர் இதுவரை காண்டஹாரில் காணப்படவில்லை. அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதற்கான காரணம் தெரியவில்லை.

ஓமரை பிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு ஆப்கானிஸ்தானில் இடைக்காலப்பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹமித் கர்சாயிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்றார்.

ஒமரைப் பிடிப்போம்:

இது குறித்து கர்சாய் கூறுகையில், ஆப்கானிஸ்தானை ஆள வாய்ப்பு கிடைத்த முல்லா ஒமர் தனக்குக் கிடைத்தவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது அவர் உயிருக்குப் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.அவரை எப்படியும் பிடிப்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X