For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணகி சிலை விவகாரம்: தமிழக அரசு மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைக்கதமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹசன் முகமது ஜின்னா என்பவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1968ம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டின் போது இந்த கண்ணகி சிலை நிறுவப்பட்டது. கடந்த 6ம் தேதிஒரு லாரி மோதியதில் கண்ணகி சிலை சேதமடைந்தது. சேதமடைந்த கண்ணகி சிலையை அரசு சரி செய்யும் என்றுஎல்லோரும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் கடந்த 13ம் தேதி பொதுப்பணி துறை அதிகாரிகள் சிலையை அகற்றி அந்த இடத்தில் தார் ரோடுபோட்டுள்ளனர். இது குறித்து அரசு கடந்த 18ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக கண்ணகி சிலை மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும்அகற்றப்பட்ட சிலையை வேறு இடத்தில் வைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழ் கலாச்சாரத்துக்கும், கற்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர் கண்ணகி. நியாயமற்ற முறையில் பாண்டிய மன்னன்நடந்து கொண்டதால், மதுரை நகரையே எரித்தார் என்று வரலாறு கூறுகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த சிலையை வாஸ்து சாஸ்திரத்துக்காக விபத்து என்ற சம்பவத்தை அரங்கேற்றி தமிழகஅரசு அகற்றியுள்ளது. எனவே அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதை இடத்தில் நிறுவ வேண்டும். வேறு எங்கும்மாற்றக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்ற முதல் டிவிஷன்பெஞ்ச் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X