For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். விமானங்களுக்கு தடை: தூதரக ஊழியர்கள் குறைப்பு - இந்தியா கடும் நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தான் மீது மிகக் கடுமையான நடவடிக்கைளை இந்தியா எடுத்துள்ளது.

இன்று பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த தேசிய பாதுகாப்புக்கான கேபினட் குழுவின் கூட்டத்திற்குப் பின்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தூதரகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைக்கப்படும்.

இதன் பின்னர் இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர்ஆகியோர் டெல்லி முனிசிபாலிடி எல்லைக்கு வெளியே செல்லத் தடை விதிக்கப்படும்.

இது 48 மணி நேரத்தில் அமலுக்கு வரும்.

விமானங்களுக்குத் தடை:

அடுத்ததாக, பாகிஸ்தானின் எந்த விமானமும் இந்திய வான் பகுதியின் மீது பறக்க தடை விதிக்கப்படும். இதில்பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களும் அடங்கும். இது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

தீவிரவாதத்துக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் விளையாடிக்கொண்டிருக்கிறது. லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகிய அமைப்புகள் மீது சரியான நடவடிக்கைஎடுக்காமல் பாகிஸ்தான் ஏமாற்றிக் கொண்டிக்கிறது.

ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவன் மசூத் அஸாருக்கு பதிலாக அவரது தம்பியைக் கைது செய்ததுபாகிஸ்தான் அரசு. பின்னர் 2 நாட்களில் விடுவித்துவிட்டது. சரியாக அடையாளம் தெரியாததால் அவரைதவறுதலாகக் கைது செய்துவிட்டதாகக் கூறி நாடகம் போடுகிறது பாகிஸ்தான்.

உலகமே தேடி வரும் ஒரு தீவிரவாதியை பாகிஸ்தானை ஆளும் ராணுவ அரசுக்குத் தெரியாமல் போய்விட்டதா?இதை யாராவது நம்புவார்களா?. இது பாகிஸ்தான் எந்த அளவுக்கு இந்தியாவின் பிரச்சனையை மிகச் சாதரணமாகஎடுத்துக் கொண்டுள்ளது என்பதைத் தான் காட்டுகிறது.

பாகிஸ்தானின் தூதரக அதிகாரியே தீவிரவாதிகளுக்கு உதவி செய்கிறார். பாகிஸ்தான தூதரக அதிகாரியேநாடாளுமன்றத்தில் வந்து ரகசிய தகவல்களை விலைக்கு வாங்குகிறார். இந்தியாவை பாகிஸ்தான் மிகச்சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதைத் தான் இது காட்டுகிறது.

எதற்கும் தயார்:

இதனால், பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டுவது என்ற முடிவுக்கு இந்தியா வந்துள்ளது. போருக்கும் தயார்.

இப்போது எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் கேவலப்படுத்துமானால், அடுத்து என்ன நடவடிக்கைஇருக்கும் என்பது குறித்து நான் விளக்க வேண்டியதில்லை.

மசூத் அஸாரின் தம்பியைக் கைது செய்து பின்னர் விடுவித்துவிட்டு இப்போது மசூத் அஸாரைக் கைதுசெய்துள்ளார்கள். அவன் எங்கே இருக்கிறான். அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பதுகுறித்து எல்லா தகவல்களையும் பாகிஸ்தான் மறைக்கிறது. அவனைக் கைது செய்தது கூட அவனைக் காப்பாற்றும்முயற்சி தான்.

தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்தஇரு தீவிரவாத இயக்கங்களையும் தடை விதித்து, சொத்துக்களை முடக்கியது மிக உதவிகரமான செயலாகும்.

பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஏற்க முடியாது. அதை நொறுக்கியே தீருவோம்.

பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது:

பாகிஸ்தானுடன் இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பில்லை. இந்தியாவின் நிலைமை குறித்துவிவரிக்க அமைச்சர்கள் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வர்.

இரு நாட்டு மக்களிடையிலான நல்லுறவைக் கூட பாகிஸ்தான் விரும்பவில்லை. சிறுபிள்ளைத்தனமானசெயல்பாடுகிறது அந் நாடு. சார்க் மாநாடு நேபாளில் திட்டமிட்டபடி நடக்கும். பிரதமர் வாஜ்பாய் நிச்சயம்பங்கேற்பார் என்றார் ஜஸ்வந்த் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X