For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ரேக்ளா ரேஸ் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகை மதுரையில் பல விதங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை,மாட்டுப் பந்தயம் எனப்படும் ரேக்ளா ரேஸ், மோட்டார் சைக்கிள் ரேஸ் என பல ரூபங்களில் மதுரை மற்றும்சுற்றுப்புற மக்கள் தங்களது பொங்கல் தின மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இதில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. மற்றொரு முக்கியமானநிகழ்ச்சியான ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டி பந்தயம் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்புதன்கிழமை நடப்பதாக இருந்தது.

ஆனால் இந்தப் பந்தயத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மகேஸ்வரன் திடீர் எனத் தடை விதித்துள்ளார்.

இரு வேறு குழுக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இந்தப் போட்டியை நடத்த அறிவிப்பு வெளியிட்டதால்பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ரேக்ளா பந்தயத்தின்போது பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக பொதுமக்கள்தரப்பிலும் புகார்கள் வந்தன.

இதையடுத்தே ரேக்ளா ரேஸை நடத்த தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வரலாற்றில் ரேக்ளா ரேஸ் தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30-35 கிலோமீட்டர் தூரத்திற்கு ரேக்ளா ரேஸ் நடக்கும். அந்தசமயத்தின்போது குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது போக்குவரத்து தடைப்படும். வேறு வழியில் போக்குவரத்துதிருப்பி விடப்படும். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாக நிேரிடுகிறது.

மேலும், ரேக்ளா ரேஸ் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை, போட்டியில் கலந்து கொள்வோர் அடித்துத்துன்புறுத்துவது காணச் சகிக்காதது. வேகமாக மாடுகள் ஓட வேண்டும் என்பதற்காக அதற்கு சாராயம்கொடுப்பார்கள், தார்க்குச்சியால் மாடுகளை கடுமையாக குத்துவார்கள், அதன் வாலை பயங்கரமாகமுறுக்குவார்கள்.

சில மாடுகள் கண்களில் நீர் வழிய ஓடுவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும். போட்டிகளில் ஜெயிக்காதமாட்டு வண்டிக்காரர்கள், தங்களது மாடுகளை கொன்று விடுவார்களாம்.

இந்த நிலையில் பொதுமக்கள், பிராணிகள் நல விரும்பிகள் என பல தரப்பட்டவர்களும் இந்தப் போட்டியை தடைசெய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

அதை ஏற்று தற்காலிகமாக 16ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்நிரந்தரமாகவே இந்ததடையை அமல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X