For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்குதலுக்கு 2 அமைப்புகள் பொறுப்பேற்பு

By Staff
Google Oneindia Tamil News

கொல்கொத்தா:

கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மொத்தம் 2 அமைப்புகள்பொறுப்பேற்றுள்ளன.

முதலில் ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி என்ற அமைப்பு பல பத்திரிக்கை அலுவலகங்களையும் தொலைபேயில்தொடர்பு கொண்டு நாங்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தினோம் என்று கூறியது. இந்த அமைப்புபங்களாதேஷில் இருந்து கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆனால், இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்திற்குள் ஆசீப் ரசாக் கமாண்டோஸ் என்ற இன்னொரு அமைப்பு இந்தத்தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று கூறிக் கொண்டு பொறுப்பேற்றது. இவர்களும் பத்திரிக்கைகளைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

ஆசீப் ரசாக் கமாண்டோஸ் அமைப்பு கொல்கத்தாவில் நடந்த பல ஆள் கடத்தல்களில் தொடர்புடையதாகும். இந்தஅமைப்பின் தலைவன் ஆசிப் ராசா சில மாதங்களுக்கு முன் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் என்ற ஆப்தாப் மாலிக் துபாயில் இருந்து கொல்கத்தா போலீசாரைத் தொடர்புகொண்டு இத் தாக்குதலை எங்கள் அமைப்பு தான் நடத்தியது என்று கூறியுள்ளான். இவன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவு அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையவன்.

இத் தாக்குதலை இந்த இரு அமைப்புகளும் சேர்ந்தே நடத்தியிருக்கலாம் என கொல்கத்தா போலீசார்கருதுகின்றனர்.

சம்பவம் நடந்த கொல்கொத்தாவின் செளரிங்கே பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். மோட்டர்சைக்கிள்களில் வந்த 4 தீவிரவாதிகளும் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் செல்ல முடியாமல் இந்தப்பகுதியிலேயே பதுங்கியிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இத் தாக்குதலை நடத்தியவர்களை பிடித்துவிட முடியும் என்று போலீசார்கூறுகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டமும்,அமைச்சரவைக் கூட்டமும் நடந்தது. தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளுடன் பட்டாச்சாரியா ஆலோசனைநடத்தியவண்ணம் உள்ளார்.

இதற்கிடையே இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்க மையங்கள், அமெரிக்கநிறுவனங்களின் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் பலத்த பாதுகாப்பு:

டெல்லியில் உள்ள அமெரிக்கத் தலைமைத் தூதரகத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சென்னை அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றிலும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தூதரகத்தின் அருகில்உள்ள அண்ணா மேம்பாலத்தின் மீதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுஅதன் பின்னால் இருந்து கொண்டு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தபோலீசாருக்கு புல்லட் புரூப் உடைகள் வழங்கப்படும் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஜகன் புஜ்பால்கூறினார்.

அமெரிக்கா அனுதாபம்:

டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கோர்டன் டுகுத் நிருபர்களிடம் கூறுகையில்,இத் தாக்குதலில் இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறோம் என்றார்.

பிரதமர் தலைமையில் அவசரக் கூட்டம்:

இந் நிலையில் கொல்கொத்தா நிலைமை குறித்தும், நாட்டின் பாதுகக்பபு குறித்தும் விவாதிக்க பிரதமர் வாஜ்பாய்தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது. பின்னர் தேசிய பாதுகாப்புக்கானமத்திய கேபினட் கமிட்டியின் கூட்டத்தையும் பிரதமர் நடத்துகிறார்.

கொல்கத்தாவில் நடந்துள்ள முதல் தீவிரவாதிகள் தாக்குதல் இது தான். இதனால், அந் நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துபோயுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X