For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட்: வென்றது இங்கிலாந்து

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த பரபரப்பான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியைஇங்கிலாந்து அணி இரண்டே ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டாஸ் வென்ற இந்திய அணியினர் எதிரணியினரை பேட் செய்யுமாறு அழைத்தனர்.

களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டிரஸ்கோத்திக்கும் நைட்டும் முதல் 11ஓவர்களுக்கு நிதானமாக விளையாடினர்.

ஆனால் 12வது ஓவரில் அகர்கரின் பந்து வீச்சுக்கு டிரஸ்கோத்திக் (35 ரன்கள்) பலியானார்.

அதன் பிறகு நைட்டுடன் ஜோடி சேர்ந்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹூசைன். இருவரும் இந்தியஅணியின் பந்துகளைச் சிதறடித்தனர்.

தங்கள் அணியின் ஸ்கோர் 168ஐ எட்டும் வரை அவர்கள் களத்திலிருந்தனர். பின்னர் 49 ரன்கள் எடுத்த நிலையில்ஹூசைன் அவுட் ஆனார்.

அடுத்து வந்த பிளின்ட்டாப்பும் நைட்டும் சேர்ந்து 80 ரன்கள் எடுத்தனர். அப்போது நைட் 104 ரன்கள் எடுத்தநிலையில் அகார்கரால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

கடைசியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களையும் ஆடி முடித்து, 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 272 ரன்களைஇந்திய அணிக்கு இலக்காக வைத்தது.

அகார்கருக்கு 2 விக்கெட்டுகளும் ஸ்ரீநாத்துக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் தலா ஒரு விக்கெட்டும் கிடைத்தன.

இந்தக் கடுமையான இலக்கை நோக்கிப் போராடுவதற்காக இந்தியாவும் பின்னர் களமிறங்கியது.

ஆனால் 5வது ஓவரிலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான டெண்டுல்கர் 18 ரன்களை மட்டுமே எடுத்துஅவுட்டானார். அப்போதே இந்தியாவின் வெற்றிக் கனவையும் இந்திய ரசிகர்கள் தாங்களாகவே கலைத்துக்கொண்டனர்.

ஆனால் பின்னர் வந்த அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்களுக்குவிருந்தாக்கினார். மொத்தம் 95 பந்துகளைச் சந்தித்த கங்குலி, 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 74ரன்களைக் குவித்தார்.

அவருக்குப் பின் வந்தவர்களில் கயீப் மட்டும் 46 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் மடமடவென்று அவுட் ஆகவேஇந்திய அணியினருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பதற்றம் பற்றிக் கொண்டது.

ஆனால் பதற்றமில்லாமல் ஆடிய அகார்கர் கடகடவென்று பவுண்டரிகளை அடித்ததையடுத்து, ஒரு கட்டத்தில்இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையும் வந்தது.

ஆனாலும் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை முடிந்த அளவுக்கு விரட்டிய அகார்கரால் (24 பந்துகளில் 36 ரன்கள்)272ஐ எட்ட முடியாமல் போயிற்று. கடைசிப் பந்தில் 5 ரன்களை எடுத்தால்தான் வெற்றி என்ற நிலையில் 2 ரன்களைமட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.

இதனால், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டிய இந்திய அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தது.

இந்தியாவின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து அணியின் கைல்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X