For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி முன் சரணடையத் தயார்: வீரப்பன் கும்பல் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் முன் நாங்கள் சரண் அடையத் தயார் என்று வீரப்பன் தரப்பினர்தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வீரப்பனின் வலது கரமான சேத்துக்குளியான் எனப்படும் சேத்துக்குளி கோவிந்தன் இதுகுறித்து பத்திரிக்கைஅலுவலகங்களுக்கு தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, ஜனாதிபதி முன் சரண் அடைய நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு முன் இதுகுறித்து பேசுவதற்காகநெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, பெங்களூர் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சண்முக சுந்தரம், பெங்களூர்மாநகராட்சிக் கவுன்சிலர் பாரி ஆகிய 4 பேர் அடங்கிய குழுவை அனுப்பி வைக்குமாறும் சேத்துக்குளியான்கூறியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இதற்கிடையே சந்தனக் கடத்தல் வீரப்பன் இன்னும் சில நாட்களில் பிடிபடுவான் என சிறப்பு அதிரடிப்படைவட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயை நெருங்கியுள்ளது. வீரப்பனின்மறைவிடம் குறித்து உறுதியான தகவல் அதிரடிப்படைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையில் முன்பு ஈடுபட்டிருந்த சென்னை நகர கமிஷனர் விஜயகுமார்காட்டுக்குச் சென்று திரும்பியுள்ளார். இதை தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா, டிஜிபி நெய்ல்வால்மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

வீரப்பனுக்குக் கண்புரை நோய் ஏற்பட்டுள்ளதால் அவனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவ்வளவுஎளிதாகச் சென்றுவிட முடியாது என்பதால் அவனை விரைவில் பிடித்துவிட முடியும் என்று நரேஷ் குப்தா கூறினார்.

இந்நிலையில், மாதேஸ்வரன் மலைப் பகுதியில்தான் வீரப்பன் ஒளிந்திருப்பதாக நம்பகமான தகவல் வந்துள்ளது.இதையடுத்து தமிழக மற்றும் கர்நாடகக் கூட்டு அதிரடிப்படை வீரர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வீரப்பன்இருக்குமிடத்தை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றனர்.

இந்த முறை எப்படியும் வீரப்பனைப் பிடித்து விட வேண்டும் என்று உறுதியுடன் அந்தப் பகுதியைச் சுற்றிலும்போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு முற்றுகையிட்டுள்ளனர். வீரப்பனை எப்படியும் உயிருடன் பிடித்துவிடுவது என்றும் அதிரடிப்படை வீரர்கள் உஷாராக முன்னேறி வருகின்றனர்.

கேரள காட்டுப் பகுதி வழியாக வீரப்பன் தப்பி விடக் கூடாது என்பதற்காக கேரள மாநில போலீசாரும்வரவழைக்கப்பட்டு மாதேஸ்வரன் மலைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீரப்பன் பிடிபடுவானா என்பது இன்னும் சில நாட்களில் உறுதியாகத் தெரிந்து விடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X