For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடத்தப்பட்ட அமெரிக்க நிருபர் உயிரோடுதான் உள்ளார்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

கராச்சியில் கடத்தப்பட்ட அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று இந்தக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான ஷேக் ஒமர் கூறியுள்ளான்.

லாகூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்ட ஒமர், போலீஸ் விசாரணைக்காக மீண்டும் கராச்சிக்கேகொண்டு செல்லப்படுகிறான்.

கடந்த ஜனவரி 23ம் தேதி கராச்சியில் டேனியல் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமென்றால்தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இ-மெயில் மூலம் அவர் பணிபுரியும் "வால் ஸ்ட்ரீட்"பத்திரிக்கைக்கு தீவிரவாதிகள் தகவல் அனுப்பினர்.

துப்பாக்கி முனையில் டேனியல் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இ-மெயில் மூலம் அவர்கள்அனுப்பியிருந்தனர்.

ஆனால் தீவிரவாதிகளின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து டேனியலைப் பற்றியஎந்தத் தகவலும் இல்லை. அவரைக் கடத்திய தீவிரவாதிகளும் மூச்சு விடாமலேயே இருந்தனர்.

இதற்கிடையே நாடு முழுவதும் டேனியல் எங்கு உள்ளார் என்று தேடிவந்த பாகிஸ்தான் போலீசார், இந்தக்கடத்தலில் ஷேக் ஒமரின் பங்கு உள்ளதைக் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து இ-மெயில் அனுப்புவதற்காக ஒமர் பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் புகைப்படத்தைஅனுப்புவதற்காகப் பயன்படுத்திய ஸ்கேனர் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். ஆனால் ஒமர் மட்டும்யார் கண்ணிலும் படாமல் தப்பித்தான்.

இதற்கிடையே கராச்சியிலிருந்து தப்பிய ஒமர், லாகூரில் பதுங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து,லாகூர் முழுவதும் போலீசார் வலைவீசி இவனைத் தேடி வந்தனர்.

இந்நிலையில்தான் இன்று லாகூரில் ஒமர் கைது செய்யப்பட்டான். முதல்கட்ட விசாரணையின்போது, டேனியல்இன்னும் உயிரோடு இருப்பதாகப் போலீசாரிடம் அவன் தெரிவித்துள்ளான்.

டேனியல் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து ஒமரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். அடுத்தகட்ட விசாரணைக்காக அவன் உடனடியாகக் கராச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

லண்டனில் பிறந்து, வளர்ந்து அங்குள்ள பொருளாதாரப் பள்ளியில் படித்த ஒமர், அப்படிப்பை அரைகுறையாகவேமுடித்துவிட்டு வெளியே வந்துவிட்டான்.

கடந்த 1994ம் ஆண்டு இந்தியாவில் 4 இங்கிலாந்து நாட்டவர் மற்றும் ஒரு அமெரிக்கரைக் கடத்திய வழக்கில் ஒமர்கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டான்.

அங்குதான் அவனுக்கும் மெளலானா மசூத் அஸார் என்பவனுடனும் பர்ஹான் மாலிக் என்ற அப்தாப்அன்சாரியுடனும் தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில்தான் கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காண்டஹாருக்குக் கடத்தப்பட்டது.அதிலிருந்த 155 பயணிகளைப் பணயம் வைத்து, இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில்ஒருவன்தான் ஒமர்.

அப்போது இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட மற்றொரு தீவிரவாதியான மசூத் அசாருடன் சேர்ந்து பின்னர்பாகிஸ்தானில் ஜெய்ஷ்-ஏ-முகமது என்று தீவிரவாத அமைப்பை ஒமர் உருவாக்கினான். இந்தத் தீவிரவாதஅமைப்புக்குப் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐதான் நிதி உதவி வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கும் அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர்சட்டசபை தாக்கப்பட்டதற்கும் ஜெய்ஷ் அமைப்புதான் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மசூத் அசாரை பாகிஸ்தான் ஏற்கனவே கைது செய்துவிட்டது.

கடந்த 1999ல் இந்திய அரசு இவர்கள் 2 பேரையும் விடுவித்தபோது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களையும்நீக்கிவிட்டதால், இவர்களை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்குமா என்பது சந்தேகம்தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X