For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய பாதுகாப்பு: வாஜ்பாய் தலைமையில் அவசரக் கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தேசிய பாதுகாப்பு குறித்த கேபினட் கமிட்டியின் கூட்டம் இன்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் அவசரமாய்க் கூடிவிவாதித்தது.

பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நேற்றே நிருபர்களிடம் பேசியபாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் படைகளை எல்லையில் இருந்து வாபஸ் பெற மாட்டோம் என அறிவித்துவிட்டார்.

இன்றைய கூட்டத்திலும் இதே முடிவு தான் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டம் 2 மணி நேரம் நீடித்தது. உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், விமானப் படைத் தளபதி கிருஷ்ணசாமி, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் பந்த், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் தொடர்புடைய சேக் சயீத் ஒமர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தந்தவாக்குமூலத்தின் விவரங்களை எங்களிடம் தர வேண்டும் என இந்தியா கோரியுள்ளது. இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்ட 2நாட்களில் இக் கூட்டம் நடந்துள்ளது.

முஷாரபின் நம்பிக்கை:

எல்லையில் நிலவி வரும் பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருவதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப் கூறினார். வரும் மே, ஜூன் மாதங்களில் இந்தப் பதற்றம் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் அவர்கூறியுள்ளார்.

லாகூரில் கூட்டமொன்றில் பேசிய அவர்,

பாகிஸ்தானை இந்தியா தாக்காமல் இருந்ததற்கு நமது படை பலம்தான் காரணம். ஆனால், எல்லையில் பெரும் அளவில்படைகளை இந்தியா குவித்து வைத்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் படைகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில்எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.

ஆப்கனில் ஐ.எஸ்.ஐயை மூடியது பாக்.:

இந் நிலையில் ஆப்கானில்தானில் தலிபான் ஆட்சியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தானின் உளவு அமைப்பானஐ.எஸ்.ஐ. தனது ஆப்கானிஸ்தான் பிரிவை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரிவு தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு உதவிகள் செய்து வந்தது. அமெரிக்காவின் நெருக்குதலையடுத்துஇந்தப் பிரிவை பாகிஸ்தான் மூடிவிட்டதாகத் தெரிகிறது.

ஆனால், காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிட அமைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐயின் பிரிவு இன்னும் மூடப்படவில்லை எனநியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.

அமெரிக்க நெருக்குதலையடுத்து ஐ.எஸ்.ஐயின் காஷ்மீர் பிரிவின் பலம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அதிகாரத்தைபர்வேஸ் முஷாரப் ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தப் பிரிவை மூட முஷாரபே நினைத்தாலும் முடியாது. அந்த அளவுக்கு ராணுவ அதிகாரிகளிடையே ஐ.எஸ்.ஐக்குஅதிகாரம் உள்ளது. ஐ.எஸ்.ஐயை மீறி யாரும் பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்துவிட முடியாது. காஷ்மீரில் தனதுநடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐயும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் தாக்குவோம் என இந்தியா கூறியுள்ளதால்இந்த காஷ்மீர் பிரிவின் நடவடிக்கைகள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்கான், காஷ்மீர் பிரிவில் இருந்த அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதால் அவர்களை விசாரிக்கஅமெரிக்கா அனுமதி கோரியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் இதுவரை பதில் கூறாமல் இருந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X