அரசின் அலட்சியம்: தேர்வு எழுத முடியாத நிலையில் தலித் மாணவர்கள்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கு வழங்க வேண்டியஅரசு உதவித்தொகை வழங்கப்படாததால் அவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேல்நிலைப் பள்ளி, அரசுக் கலைக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட,பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) மாணவர்களுக்கு விடுதி வசதியையும், கல்வி உதவித் தொகையையும் அரசுவழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இந்த தொகையை மாணவர்களுக்குஅரசு வழங்கிவிடும்.
விடுதிகளில் தங்கிப் பயிலும் இந்த மாணவர்களிடம் இருந்து விடுதி மற்றும் சாப்பாடு கட்டணம் அவர்களுக்கு வரும்அரசு உதவித்தொகையில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டும் மாணவர்களுக்காக முதல் கட்டமாக ரூ.1.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்த தொகை கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
2வது கட்டமாக அரசு உதவித்தொகை 2,028 மாணவர்களுக்கு வர வேண்டி உள்ளது. இதில் இன்ஜினியரிங்கல்லூரி, மருத்துவக் கல்லூரி உட்பட அனைத்து கல்லூரிகளும் அடக்கம்.
ஆனால், இவர்களுக்கு இதுவரை கல்வி உதவித்தொகை வரவில்லை. இதனால் விடுதியைவிட்டு டிஸ்மிஸ்செய்யப்படும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.
அதே நேரத்தில் ஏப்ரலில் செமஸ்டர் தேர்வு ஆரம்பமாக உள்ளது. அதற்கான கட்டணத்தையும் வரும் மார்ச்மாதத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் தேர்வு எழுத முடியும்.
அரசின் அலட்சியமான போக்கால் தேர்வு எழுத முடியாத நிலைக்கும் விடுதியை விட்டு வெளியேறும் நிலைக்கும்இந்த மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications