For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயிலுக்கு தீ: குஜராத், மகாராஷ்டிராவில் வி.எச்.பி. பந்த்

By Staff
Google Oneindia Tamil News

கோத்ரா:

அயோத்தியிலிருந்து ராம பக்தர்கள் வந்த ரயில் தீவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து குஜராத் மற்றும்மகாராஷ்டிராவில் முழு அடைப்பிற்கு (பந்த்) விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

அயோத்தியிலிருந்து அகமதாபாத்துக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (புதன்கிழமை)காலை திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.

அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூஜைகளில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ராம பக்தர்கள் இந்த ரயிலில் பயணம் செய்தனர்.

குஜராத் மாநிலம் கோத்ரா நகரை அடைந்த பிறகு அந்த ரயிலைத் தாக்கிய அடையாளம் தெரியாத சிலர், அதன் 4பெட்டிகளில் பெட்ரோல் மற்றும் ஆசிட் குண்டுகளை வீசிவிட்டு ஓடிவிட்டனர். இதனால் அந்த 4 பெட்டிகளும்பயங்கரமாகத் தீப்பிடித்து எரிந்தன.

இச்சம்பவத்தில் இதுவரை 25 பெண்கள், 15 குழந்தைகள் உள்பட 58 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும்50க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இதையடுத்து குஜராத்தின் பல்வேறு நகரங்களிலும் வன்முறை வெடித்துள்ளது. பரோடாவில் ஒரு ஆட்டோ டிரைவர்கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆபத்தான நிலையில்மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பரோடா மட்டுமல்லாமல் குஜராத் மாநிலத்தின் பல்வேறுஇடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களைக் கண்டதும் சுடவும் போலீசாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

சபர்மதி எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ள இந்தச் சம்பவத்தைக் கண்டித்துகுஜராத்திலும் மகாராஷ்டிராவிலும் பந்த் நடத்த வி.எச்.பி. அழைப்பு விடுத்துள்ளது. இச்சம்பவத்தை முஸ்லீம்களும்கண்டிக்க வேண்டும் என்றும் வி.எச்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் தன்னுடைய நிலையிலிருந்தும் வி.எச்.பி. சிறிதளவு கூடப் பின்வாங்கவில்லை. பல்வேறுமாநிலங்களிலிருந்தும் ராம பக்தர்கள் அயோத்திக்கு வந்து கொண்டேதான் இருப்பார்கள் என்று அவ்வமைப்புகூறியுள்ளது.

மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் மார்ச் முதல் வாரத்தில் சுமார் 15,000 ராம பக்தர்கள் அயோத்தி சென்று "பூர்ணயுக்தி" பூஜையில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று வி.எச்.பி. அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அயோத்தியிலும் கலவரம் பரவும் என்ற அச்சம் காரணமாக அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாரா மிலிட்டரி படையினரும் அயோத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்தத் துயரச் சம்பவம் காரணமாக பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய ஆஸ்திரேலியப் பயணத்தைரத்து செய்துவிட்டார். அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாமத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன் பாஜக உறுப்பினர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்துக் கோஷங்களைஎழுப்பினார்கள்.

நாடாளுமன்றத்தின் மையப் பகுதிக்கு வந்து அவர்கள் கோஷங்களை எழுப்பியதால், பட்ஜெட் தாக்கல் செய்வதில்சுமார் 15 நிமிடங்களுக்குத் தாமதம் ஏற்பட்டது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X