For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தி விவகாரம்: சங்கராச்சாரியார்-வி.எச்.பி. பேச்சு தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

பிரதமர் வாஜ்பாயின் வேண்டுகோளையேற்று காஞ்சி சங்கராச்சாரியார் சிறப்பு விமானம் மூலம் டெல்லி விரைந்தார்.

அயோத்தியில் கோவில் கட்டும் பணியை இப்போதைக்குக் கைவிடுமாறு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களைநேரில் சந்தித்து அவர் கோரிக்கை விடுத்தார். பிரதமரின் சார்பில் அமைதித் தூதராக அவர் இந்த முயற்சிகளில்ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காஞ்சிபுரம் வந்துசங்கராச்சாரியாரைச் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.

இப்போது பிரதமரே நேரடியாக சங்கராச்சியாரிடம் உதவி கேட்டு தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.

இதையடுத்து சங்கராச்சாரியார் டெல்லி விரைந்தார். அவருக்காக மத்திய அரசு சிறப்பு விமானத்தை ஏற்பாடுசெய்திருந்தது. அவரது பயணம் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கலுக்கு மிகவும் நெருக்கமானவர் சங்கராச்சியார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

முன்னதாக சங்கராச்சியாருக்கும் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து காஞ்சி மடத்துக்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லி போய் சேர்ந்த சங்கராச்சாரியாரை விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களான மகான் பரமஹம்ஸ்ராமச்சந்திர தாஸ், அசோக் சிங்கல், ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர், பிரவீன்பாய் தொகாடியா ஆகியோர் சந்தித்துப்பேசினர்.

முன்னதாக இந்தத் தலைவர்கள் அயோத்தி விவகாரம் குறித்து டெல்லியில் இந்து மதத் தலைவர்களுடன் பேச்சுநடத்தினர். இதன் பின்னர் சங்கராச்சாரியரை சந்தித்தனர்.

வி.எச்.பி. பிடிவாதம் தொடர்கிறது:

ஆனால், காஞ்சி சங்கராச்சாரியாரின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. 15ம் தேதி கோவில்கட்டியே தீருவோம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்காக நிலத்தை 12ம் தேதிக்குள் ஒப்படைத்தேஆக வேண்டும் என மத்திய அரசுக்கு அந்த அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் கோவிலுக்கான தூண்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இதற்கிடையே போலீஸ் கண்காணிப்பையும் மீறி 5,000க்கும் மேற்பட்ட கர சேவகர்கள் அயோத்தியில்குவிந்துள்ளனர்.

அசோக் சிங்கல் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த பிப்ரவரி 24ம் தேதி யாகத்தைத் தொடங்கினோம். இந்த யாகம்முடிவடைவதற்குள் கோவில் கட்டும் பணி நிச்சயம் தொடங்கும். வரும் 15ம் தேதி கோவிலுக்கான தூண்கள்கோவில் பகுதிக்கு கொண்டு செல்லப்படும். ஆகவே, அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தை எங்களிடம்அரசு ஒப்படைக்க வேண்டும்.

காஞ்சி சங்கராச்சியார் இன்று மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து நிலத்தை எங்களிடம் ஒப்படைக்குமாறுகோரிக்கை விடுப்பார் என்றார்.

இந்த விவகாரத்தில் வி.எச்.பியிடம் மத்திய அரசு மிகவும் பணிந்து வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.வி.எச்.பியின் செயல்களுக்கு பா.ஜ.கவின் மறைமுக ஆதரவு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இதுஏற்படுத்தியுள்ளது என மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசு கூறியுள்ளார்.

ரயில் எரிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ. சதி

இதற்கிடையே ரயில் எரிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.யின் சதி இருப்பதாக பாஜக தேசிய தலைவர்ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

குஜராத்தில் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட்ட ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

சபர்மதி ரயில் எரிப்பில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு உள்ளது. இந்தியாவின்ஒற்றுமையை குலைப்பதற்காக பாகிஸ்தான் தான் இந்த மாதிரி சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

நாட்டு மக்கள் மதக்கலவரத்தில் ஈடுபடாமல் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருக்க வேண்டும் என்றுஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X