For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவுக்கு நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி மற்றும் அவரது அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த ஐ.பி.எஸ்.அதிகாரிகள் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இதில் பல அதிகாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கான பணமும், சொத்துக்களும் சிக்கியுள்ளன. மாத ஊதியமாக18,000 ரூபாய் வாங்கிய இந்த அதிகாரிகளிடம் கணக்கில் வராத பெரும் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடனேயே திமுகவை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார். முதல்கட்டமாக திமுக ஆட்சியில் விசுவாசமாக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் முக்கியமாக சிக்கியிருப்பவர் கடந்த திமுக ஆட்சியில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஜி. ஜெகநாதன். இவரிடம் பல கோடிக்கு சொத்துக்கள் உள்ளது இந்த ரெய்டுகளில்தெரியவந்துள்ளது.

இவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மிகவும் நெருக்கமானவர். வீரபாண்டியின் மகன் சேலத்தில்கட்டைப் பஞ்சாயத்துகளிலும், பிறரின் நிலங்களை அபகரிப்பதிலும் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.வீரபாண்டியின் மகனின் அராஜக செயல்களுக்கு அப்போது சேலம் போலீஸ் கமிஷ்னராக இருந்த ஜெகந்நாதன்உதவியாக இருந்துள்ளார். இதன்மூலம் இவரும் பெரும் பணம் சம்பாதித்துள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகத்தால் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற ஜெகந்நாதன் தற்போது மதுரையில் அவரது மகள்பெயரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் கமிஷனராக இருந்த போது மகன், மகள், மருமகன்,மருமகன் பெயரில் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஷாம்பிங் காம்ப்ளக்ஸ்கள், வீடுகள், நிலங்கள், பண்ணைகள், தோட்டம் எனநிரந்தர வருவாய் ஏற்படுத்தும் ஏராளமான சொத்துக்களை இவர் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.மகன், மகள் வீட்டிலும் சோதனை நடத்தினர். இங்கிருந்தும் ஏராளமான ஆவணங்களை போலீசார்கைப்பற்றியுள்ளனர். மேலும், நகைகள், ரொக்கம் போன்றவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில்லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இவரிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் இவர் பல கோடிக்கு சொத்துக்கள் வாங்கியிருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் குறித்து மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின்உத்தரவுப்படி அடுத்து கட்ட நடவடிக்கை இருக்கும் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மின்வாரிய அதிகாரி வீட்டில்...

இவர் மட்டுமல்லாமல் மின்வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி. இளங்கோவனுடைய சென்னை வீட்டில்புதன்கிழமை சோதனை நடந்தது. இங்கிருந்தும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் தவிர திமுக ஆட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த சென்னையில் பணியாற்றிய ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி.மற்றும் பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் வீடுகளிலும், எந்நேரத்திலும் சோதனை நடத்தப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தபோது அதிமுக ஆதரவு அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தி பல கோடி சொத்துக்களைஅவர்கள் குவித்திருப்பதை வெளிக் கொண்டு வந்தது. இப்போது திமுக ஆதரவு அதிகாரிகளின் சொத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

அமைச்சர்களுக்கு உதவிய அதிகாரிகளே இவ்வளவு சொத்துக்களைக் குவித்திருந்தால், அமைச்சர்கள் எவ்வளவுசம்பாதித்திருப்பார்கள் என்று நினைத்தாலே மயக்கம் வருகிறது.

அதிமுகவோ... திமுகவோ...

கோடிகள் அவர்களுக்கு... கோமணங்கள் மக்களுக்கு..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X