For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் அலுவலகத்தை திமுகவினர்தான் தாக்கினர்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை-சேப்பாக்கத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திமுகவினரேதாக்கிவிட்டு, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

தன் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த அலுவலகத்திலேயே திடீர்உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மற்றும் துணை கமிஷனர்சைலேந்திரபாபு ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2 மணி நேரத்தில் அதைக் கைவிட்டார்.

கருணாநிதியின் இந்தத் திடீர்ப் போராட்டத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா, திமுகவினர்தான்அந்த அலுவலகத்தைத் தாக்கியதாகக் கூறியுள்ளார். அவ்வறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

நடக்காத ஒரு சம்பவத்தை நடந்தது போலவும், மிகச் சிறிய விஷயத்தைக் கூட ஊதிப் பெரிதாக்குவதிலும்வல்லவரான கருணாநிதியின் ஆரோக்கியமற்ற அரசியலின் ஒரு பகுதியே இந்த உண்ணாவிரத நாடகம்.

திமுகவினரின் ஒரு பிரிவினரே இந்த தாக்குதலுக்குக் காரணம் என எனக்குத் தெரிய வந்துள்ளது. சேப்பாக்கம் பகுதிதிமுக செயலாளரை அண்ணா அறிவாலயத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்திய பிறகே இந்தத் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டு வேண்டுமென்றே இப்படியொரு தாக்குதலை நடத்தி, அதன் மூலம் எனது அரசுக்கு தர்மசங்கடத்தைஏற்படுத்த கருணாநிதி முயன்று வருகிறார்.

கருணாநிதியின் உண்ணாவிரதம் குறித்து அறிந்ததும், போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டு, அவருடையமுதிர்ந்த வயதைக் கருத்தில் கொண்டு உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும், இந்தச் சம்பவத்தில்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் எடுத்துக் கூறச் சொன்னேன்.

இந்த செய்கை மூலம் மலிவான அரசியல் லாபத்தையும், விளம்பரத்தையும் தேடிக் கொள்ள கருணாநிதிமுயல்கிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இப்படிப்பட்ட மலிவான அரசியலை நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல பாடுபட்டு வரும் அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருந்து, கருணாநிதி போன்ற மூத்த அரசியல்தலைவர்கள் ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X