அயோத்தி விவகாரம்: மத்திய அரசுக்கு திமுக திடீர் மிரட்டல்
சென்னை:
அயோத்தி விவகாரத்தில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரட்டை நிலையைக் கடைப்பிடித்தால்,அக்கூட்டணியில் நாங்கள் தொடர்வது பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்று தமிழக சட்டசபை திமுக துணைத்தலைவர் துரைமுருகன் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
அயோத்தி பிரச்சனையில் சிக்கி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் வாஜ்பாய் அரசு, அயோத்தியில் பூமி பூஜை செய்யஅனுமதிக்கலாம் என்று தன்னுடைய கருத்தை அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜி உச்ச நீதிமன்றத்தில்கூறியதையடுத்து, மேலும் திணறிப் போயுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் சொராப்ஜி தெரிவித்த இந்தக் கருத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின்மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. ஆனாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி நடந்து கொள்வோம் என்றுஇறுதியாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க மறுத்த திமுக தலைவர் கருணாநிதி, பின்னர் நேற்று மாலை வெளியிட்டஅறிக்கையில் ரத்தக் களரி ஏற்பட வாய்ப்பில்லாமல் உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு வழங்கி விட்டது என்றுகூறியதோடு ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது துரை முருகன்பேசியதாவது:
சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில் பூமி பூஜை செய்ய அனுமதி வழங்கலாம் என்று சொராப்ஜி உச்ச நீதிமன்றத்தில்கூறினார்.
மத்திய அரசின் கருத்தைத்தான் அவர் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால் அதைத் தானாகத்தான்கூறியதாகப் பின்னர் அவர் கூறினார்.
ஆனாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இந்தக் கருத்தைக் கடுமையாக எதிர்த்தன.
அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து இரட்டை நிலையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தால்,அக்கூட்டணியிலிருந்து விலகுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம் என்று துரைமுருகன் கூறினார்.
தீர்ப்புக்கு தமாகா வரவேற்பு:
இதற்கிடையே அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமாகா வரவேற்றுள்ளது.
சென்னையில் இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், நாட்டில் அமைதியைவிரும்புபவர்கள் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications