For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருக்குறளை தேசிய நூலாக்க பழ. நெடுமாறன் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

பெங்களூரில் கடந்த இரு நாட்களாக தமிழ் ஆட்சிமொழி மாநாடு நடைபெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை)பிற்பகல் "திருக்குறள் - தேசிய நூல்" என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபழ.நெடுமாறன் பேசியதாவது:

திருக்குறளுக்கு இணையான நூல் வேறு எதுவும் இல்லை. 1,330 குறளில் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற சொல்இல்லை. இதுவே இதன் சிறப்பாகும்.

திருக்குறளின் பெருமையை உணர்த்த இன்னொரு நூல் எழுதப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு நூலின்பெருமையையும் பாட இன்னொரு நூல் எழுதப்படவில்லை.

திருக்குறள் உலகம் முழுவதும் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 15மொழிகளில் இதை மொழிபெயர்த்துள்ளனர்.

மக்கள் மனதளவில் திருக்குறளை தேசிய நூலாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் அதற்கு அரசாங்கமுத்திரை மட்டுமே இன்னும் வழங்கப்படவில்லை என்பதுதான் ஒரு குறை.

இதுதான் தேசிய நூல் என்று தமிழக அரசு அறிவித்திருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளுக்கு தீர்மானம்நிறைவேற்றி வில்லங்கம் செய்யாமல், சட்ட சபையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

அனைவரும் திருக்குளின் மீது ஆணையிட்டுதான் பதவி ஏற்க வேண்டும். நீதிமன்றங்களில் திருக்குறளின் மீதுஆணையிட்டு சாட்சியங்கள் கூறப்பட வேண்டும். நாமே இதைச் செய்யாமல் மத்திய அரசை குறை சொல்லி என்னபயன்?

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பிக்களும் திருக்குறளை தேசிய நூலாக ஏற்றால், அனைவரும் ஆதரவுதருவார்கள் என்று கூறினார் நெடுமாறன்.

மேலும் இந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில:

அட்டவணை 8ல் உள்ள இந்தி தவிர, தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்கவேண்டும். தமிழ் மொழியை செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ் அச்சகங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்குதமிழக அரசு உதவி செய்ய வேண்டும். பெங்களூரில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் திருவள்ளுவர்சிலையை திறக்க தமிழக, கர்நாடக அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த தீர்மானங்களை வலியுறுத்தி மீண்டும் 2003ஆம் ஆண்டு மேமாதம் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் சிறப்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்

இந்த மாநாட்டின்போது கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும் என்றும் நெடுமாறன் கோரிக்கை விடுத்தார்.அது குறித்து அவர் பேசியதாவது:

திருவள்ளுவர், அரசின் சார்பில் தூது செல்பவர், மற்றொரு அரசரின் மனம் கோணாமல் பக்குவமாக பேசி அரசின்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அப்படிப்பட்ட தூதரே சிறந்த தூதர் என்று கூறியுள்ளார்.

தமிழக-கர்நாடக அரசுகள் சார்பில் நானும் என் நண்பர்களும் தூது சென்றோம். திருவள்ளுவர் கூறிய நல்லதூதர்களாக நாங்கள் நடந்து கொண்டு நடிகர் ராஜ்குமாரை விடுவித்து வந்தோம்.

ஆனால் தூதராகச் சென்ற மணியின் நிலை என்ன ஆயிற்று? இன்று அவர் சிறையில் உள்ளார். அவர் மீது பொய்வழக்குகளைப் போட்டு அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.

கர்நாடக அரசு இதை மறு பரிசீலனை செய்து மணியை விடுவிக்க வேண்டும் என்று நெடுமாறன் கோரிக்கைவிடுத்தார்.

தமிழக சட்டசபை பாமக தலைவரான ஜி.கே. மணி, தமிழக பாஜக பொதுச் செயலாளரான இல. கணேசன் உள்ளிட்டஏராளமான தமிழகத் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுரையிலும் மாநாடு:

இதற்கிடையே திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த 5-வது உலகத்தமிழ் மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் அரங்கில் இந்த மாநாடு நடந்தது. மாநாட்டின் இறுதி நாளான நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்த விவரம்:

1.தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும். 2.தமிழகத்தில் ஆரம்பக் கல்வியிலிருந்தே தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

3.தமிழகத்திலுள்ள நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். கோவில்களில் தமிழில்தான் அர்ச்சனை செய்யப்படவேண்டும்.

4.ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகளில் இந்தியைத் திணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

5.உலகெங்கும் 60 நாடுகளில் உள்ள தமிழ் சிறுவர்களுக்கு தமிழக அரசே தமிழை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

6.நான்காவது தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவரின் சிலை முதலில் இருந்த இடத்திலேயே நிறுவப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழறிஞர்கள் ரா.பி. சேதுப்பிள்ளை, தேவநேயப் பாவாணர், பாரதிதாசன் உள்ளிட்டோரின் படங்கள்மாநாட்டின்போது திறந்து வைக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X