For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு: அலைகள் சிறப்புச் செய்தி உறுதியானது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசுக்கு சொந்தமான 58 பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டம்மூலம் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்த exclusive report சில வாரங்களுக்கு முன்பே நமது அலைகள் இதழில் வெளியானது. இந்தச் செய்திஇப்போது உறுதியாகிவிட்டது.

நிதி நெருக்கடியைக் காரணமாகக் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற முடியும்.

இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழ்நாடு போக்குவரத்து கழகம், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், வாணிப கழகம் போன்ற 58 பொது துறை நிறுவனங்களில்விருப்ப ஓய்வு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாநில பொதுத் துறை நிறுவனங்களை அரசு 3 வகைகளாகப் பிரித்துள்ளது.

நல்ல நிதி நிலையோடு உள்ள நிறுவனங்கள், நல்ல நிதி வசதி இல்லாத நிறுவனங்கள், நிதி வசதி சரி இல்லாமல் மூடப்படும் நிலையில் உள்ளநிறுவனங்கள் என்ற மூன்று பிரிவுகள் அவை.

நல்ல நிதி நிலையோடு உள்ள நிறுவனங்கள்:

நல்ல நிதி நிலையோடு உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தால் அவருக்கு உரிய செட்டில்மென்ட்தொகையை அந்த நிறுவனமே வழங்கிவிடும். இந்த நிறுவனங்களில் மூன்று வகையான ஓய்வூய்திய திட்டங்கள் அமலாக்கப்படும். இதில்எந்த தொகை குறைவாக வருகிறதோ, அந்த தொகையை ஊழியர்களுக்கு இந் நிறுவனங்கள் வழங்கும்.

ஊழியர்கள் இதுவரை பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டிற்கும் இரண்டு மாத சம்பளத் தொகையை கணக்கிட்டுஅதை வழங்க திட்டமிட்டிருப்பது முதல் வகை. இதில் சம்பளம் என்பது சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவையும் (டி.ஏ.) சேர்த்தேகணக்கிடப்படும்.

ஓய்வு பெறுவதற்கு மீதமுள்ள பணிக்காலங்களை கணக்கிட்டு, அவற்றிற்குரிய மாத சம்பளத்தை கணக்கிட்டு வழங்க திட்டமிட்டிருப்பதுஇரண்டாவது வகை.

10,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிற உயர் மட்ட ஊழியர்களுக்கு 4,20,000 ரூபாயும், ரூ. 6,500 - ரூ. 10,000 வரைசம்பளம் பெறுபவர்களுக்கு 2,75,000 ரூபாயும், ரூ. 2,550 - ரூ. 6,500 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 2,00,000 ரூபாயும் வழங்கதிட்டமிட்டிருப்பது மூன்றாவது வகை.

மேற்கூறிய மூன்று வகைகளில் எந்த தொகை குறைவாக வருகிறதோ அந்த தொகையை தான், ஊழியர்களுக்கு நிதி நிலை நன்றாக உள்ளநிறுவனம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல நிதி வசதி இல்லாத நிறுவனங்கள்:

அடுத்ததாக நிதி நிலை சரியில்லாத நிறுவனங்கள். இங்கு ஓய்வூதியத் திட்டம் இரண்டு வகைகளாக பிரிக்கப்படும்.

ஊழியர் பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கிட்டு, ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். அத்துடன் மேலும், பணிபுரியவேண்டிய ஆண்டுகளையும் கணக்கிட்டு, ஒரு ஆண்டுக்கு 10 நாட்கள் சம்பளமும் சேர்த்து கணக்கிட்டு வழங்கப்படும். இது முதல்வகைதிட்டம்.

10,000 ரூபாய்க்கு மேலாக சம்பளம் வாங்குபவர்களுக்கு 3,50,000 ரூபாயும், ரூ.6,500 - ரூ.10,000க்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு2,50,000 ரூபாயும், ரூ.2,550 - ரூ. 6,500 க்குள் சம்பளம் வாங்குபவர்களக்கு 1,75,000 ரூபாயும் வழங்குவது இரண்டாவது வகை.

இந்த இரண்டு திட்டங்களில் எந்த திட்டத்திற்கு தொகை குறைவாக வருகிறதோ, அந்த தொகையை ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள்வழங்கும்.

மூடப்படும் நிலையில் உள்ள நிறுவனங்கள்:

அடுத்ததாக நிதி வசதி சரியில்லாமல் மூடப்படும் நிலையில் உள்ள நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் வயது வரம்போ, பணிவரம்போ, அதிக காலம் பணியாற்றியவர்களுக்கு அதிக தொகையோ எல்லாம் கிடையாது.

நிதிநிலை நன்றாக இல்லாத நிறுவனங்களைப் போலவே ஊழியர் பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மாதசம்பளம் என்று கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மேலும் பணிபுரிய வேண்டிய ஆண்டுகளைக் கணக்கிட்டு ஒரு ஆண்டுக்கு 10 நாட்கள்சம்பளமும் சேர்த்து கணக்கிட்டு வழங்கப்படும். இது முதல்வகை திட்டம்.

மொத்தமாக இரண்டரை லட்சம் ரூபாய் வழங்குவது இரண்டாவது வகை.

இந்த இரண்டு திட்டங்களில் எதில் குறைவான பணம் வருகிறதோ, அந்த தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

கட்டாய வி.ஆர்.எஸ்.:

இந்த நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதால், இதில் பணி புரியும் 90 விழுக்காடு ஊழியர்கள், கட்டாய விருப்ப ஓய்வில் சென்றாகவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டாய விருப்ப ஓய்வில் செல்லத் தவறினால் ஆள் குறைப்பு (lay-off) இழப்பீடு மட்டும் தான் அவர்களுக்கு வழங்கப்படும்.

மூன்று வகையான நிறுவனங்களிலும் தொகை கணக்கீடு ஒன்றரை லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அந்தத் தொகை உறுதியாக கிடைக்கும்.மற்றவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைப்பதும் உறுதி தான்.

நல்ல நிதி நிலையோடு உள்ள நிறுவனங்கள் மற்றும் நல்ல நிதி நிலை இல்லாத நிறுவனங்களின் குறைந்தபட்சம் பணி புரிய வேண்டியஆண்டுகள் 15லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. 40 வயது நிரம்பியவர்கள் அனைவரும்இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்திற்குள் வருவர்.

பி.எப். திட்டம் தவிர பென்சன் திட்டம் இல்லாத நிறுவனங்களுக்கே இந்த திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

மேலும் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 56 ஆகக் குறைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனை சிலமாதங்களில் அரசு அறிவிக்கும். இந்தச் செய்திகள் நமது அலைகள் ஆன்-லைன் இதழில் ஒன்றரை மாதங்களுக்குமுன்பே வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X