For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெயில் ஆன மாணவர்களுக்கு சென்னை, புதுவையில் ஆலோசனை முகாம்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் விதமாகசென்னை பல்கலைக்கழகம் முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முக்கியமான அரசுப் பொதுத் தேர்வுகளின் முடிவுகளைத் தொடர்ந்து அதில் தோல்வியடையும் பலமாணவ-மாணவிகள் தற்கொலை என்ற முடிவுக்குச் செல்வது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

மாணவர்களின் இந்தத் தற்கொலை மனப்போக்கைத் தடுத்து நிறுத்துவதற்காக சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்புமுகாமை நடத்துகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தைச் (என்.எஸ்.எஸ்.) சேர்ந்த மாணவ-மாணவியர் இந்தஆலோசனை முகாமை நடத்தவுள்ளனர்.

தோல்வியடைந்த மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது, மீண்டும் தேர்வு எழுத அவர்களைத்தயார்படுத்துவது ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்த முகாமின் போதுமாணவ-மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள்.

இதுதொடர்பான முன்பதிவுக்கு பேராசிரியர் சுரேந்திரனை 2436544 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

புதுவையிலும்...

சென்னையைப் போலவே பாண்டிச்சேரியிலும் "மைத்ரேயி தற்கொலைத் தடுப்பு நிறுவனம்" என்ற அமைப்புபாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஆலோசனை வழங்கவுள்ளது.

தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் மதிப்பெண்கள் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளமாணவ-மாணவிகளுக்கும் இந்நிறுவனம் ஆலோசனை வழங்குகிறது.

இதற்காக 339999 என்ற தொலைபேசி எண்ணைச் சுழற்றி மாணவ-மாணவிகள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

அம்மாணவ-மாணவிகள் தங்களுடைய பெயர், முகவரி எதையும் கூறவேண்டிய அவசியமில்லை என்றும்அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிறுவனத்திற்கு மாணவ-மாணவிகள் நேரிலும் சென்று ஆலோசனை பெறலாம். எண் 255, தியாகு முதலியார்வீதி, பாண்டிச்சேரி என்ற முகவரி கொண்ட இந்நிறுவனத்துக்குச் சென்று மாணவ-மாணவிகள் தங்களுக்குத்தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இன்றும் நாளையும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நிறுவனம் ஆலோசனை வழங்கும் என்றுகூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X