For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ ரகசியம் வாங்க முயன்ற பாக். அதிகாரி கைது- இந்திய அதிகாரி கடத்தல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்திய ராணுவ ரகசியங்களை வாங்க முயன்ற பாகிஸ்தான் தூதரக அதிகாரி நேற்று பிடிபட்டார். அவர் கைதுசெய்யப்பட்டு இந்திய வெளியுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரிடம் அந்த ராணுவ ரகசியங்களைவிற்க முயன்ற இந்திய விமானப் படையின் முன்னாள் அதிகாரியும் பிடிபட்டார்.

இதற்குப் போட்டியாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியரை பாகிஸ்தானின் உளவுப் பிரிவு கடத்திச்சென்றது.

அதே போல இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவை (டி.ஆர்.டி.ஓ.) சேர்ந்த ஒரு காவலரும்இந்திய ராணுவ ரகசியஙகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நரேஷ் குமார் என்ற அந்த விமானப் படை முன்னாள் அதிகாரி பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அமீர் சபீர்என்பவரிடமிருந்து ரூ.10,000 பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோது இருவரும் கையும் களவுமாகப்பிடிபட்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் போது கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு நரேஷ் குமார் ராணுவரகசியங்களை வழங்கிக் கொண்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.

நரேஷ் குமாரிடம் மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

போலீசாரிடம் பிடிபட்ட அமீர் சபீர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய தூதரக அதிகாரி கடத்தல்:

இதற்குப் போட்டியாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரி குல்வந்த் சிங் இன்று காலை கடத்திச்செல்லப்பட்டார்.

அவரை பாகிஸ்தான் உளவுப் பிரிவு தான் கடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இஸ்லாமாபாத்தில் இச் சம்பவம் நடந்தது. இந்திய தூதரக ஊழியர்கள் பெருமளவில் வசிக்கும் ராயல் என்கிளேவ்என்ற இடத்தில் தான் அவரும் வசித்து வருகிறார். இன்று காலை 11.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் தனது 10வயது மகனுடன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு அவர் வந்து கொண்டிருந்தார்.

வீட்டுக்கு மிக அருகே வந்தபோது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரைத் தாக்கியது. பின்னர்அவரையும் மகனையும் கடத்திச் சென்றனர். வழியில் அந்தச் சிறுவனையும் மோட்டார் சைக்கிளையும் ரோட்டில்விட்டுவிட்டு சிங்கை மட்டும் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து அந்தச் சிறுவன் அழுதபடியே வீட்டுக்கு ஓடி வந்து தனது தாயாரிடம் விவரத்தைக் கூறினான்.

கடந்த இரு மாதங்களில் கடத்தப்பட்டுள்ள இரண்டாவது இந்திய தூதரக ஊழியர் இவர். கடந்த ஏப்ரலில் ஏ.கே.கன்னா என்ற அதிகாரியைக் கடத்திச் சென்ற ஐ.எஸ்.ஐ. அவரை 5 மணி நேரம் காவலில் வைத்து கடுமையாகத்தாக்கியது. பலத்த காயங்களுடன் அவரை விடுவித்து உளவு பார்த்ததாக நாட்டை விட்டு வெளியேற்றியது.

குல்வந்த் சிங்கை உடனடியாக இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியாகூறியுள்ளது.

டி.ஆர்.டி.ஓ. காவலர்:

அதே போல டெல்லி டி.ஆர்.டி.ஓவைச் சேர்ந்த பல்ராம் சிங் என்ற ஒரு காவலரும் பிடிபட்டார். இவர் டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பிரவுசிங் சென்டரில் சில பிளாப்பிகளுடன் சென்றார். அந்த பிளாப்பிகளில் இருந்ததைபிரிண்ட் அவுட் எடுக்கக் கோரினார்.

அப்போது அந்த பிளாப்பிகளில் இருந்த விவரங்களைப் பார்த்து அதிர்ந்து போன அந்த பிரவுசிங் சென்டர்உரிமையாளர் உடனே போலீசாருக்குத் தகவல் தந்தார். போலீசார் அவரிடம் இருந்த பிளாப்பிகளைசோதனையிட்டபோது அதில் டி.ஆர்.டி.ஓ. மற்றும் இந்திய ராணுவம் தொடர்பான ஏராளமான ரகசிய விவரங்கள்இருந்தன.

யாருக்கு இவர் இந்த ரகசியங்களை விற்க இருந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X