For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஷாரபை நம்பி பேச்சு நடத்த தயாரில்லை: வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

அல்மாட்டி (கஜாகிஸ்தான்):

தீவிரவாதிகளை ஒழிப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 6 மாதங்களாக வெறும் வாய்பேச்சுதான் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை என பிரதமர்வாஜ்பாய் குற்றம் சாட்டினார்.

எங்கள் எல்லைக்கு அருகே பாகிஸ்தானில் இன்னும் ஏராளமான தீவிரவாத முகாம்கள் மிக சுதந்திர இயங்கிக்கொண்டு தான் உள்ளன. தீவிரவாத முகாம்கள் இல்லை என்று பாகிஸ்தான் கூறுவது பொய் என்றார் வாஜ்பாய்.

கஜாகிஸ்தானில் ஆசிய பாதுகாப்பு மாநாட்டு இன்று தொடங்கியது. ரஷ்யா, பாகிஸ்தான், சீனா உள்பட 16 நாட்டுத்தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பேசிய வாஜ்பாய் நேரடியாகவே பாகிஸ்தானின் அட்டூழியங்களைசுட்டிக் காட்டிப் பேசினார்.

அனைத்து நாட்டுத் தலைவர்களும் அருகருகே வட்ட மேஜையில் அமர்ந்திருந்தனர். வாஜ்பாய்க்கு எதிரேஅமர்ந்திருந்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தான் முதலில் பேசினார். அவருக்குபதிலளித்து வாஜ்பாய் ஹிந்தியில் பேசினார். அவர் கூறியதாவது:

வழக்கம்போல் மீண்டும் இப்போது உறுதிமொழிகளைத் தருகிறார் முஷாரப். என்னை பேச்சுவார்த்தைக்குகூப்பிடுகிறார். வெறும் உறுதிமொழிகளை வைத்துக் கொண்டு பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை.

எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறையவில்லை. அதே போல காஷ்மீரில் வன்முறை கூடிக்கொண்டே தான் வருகிறதே தவிர குறையவில்லை.

உண்மையிலேயே தீவிரவாதிகளை ஒடுக்கிவிட்டு, அவர்களை எல்லை தாண்டி அனுப்புவதை நிறுத்திவிட்டுமுஷாரப் வரட்டும். பேச்சுவார்த்தைக்கு இந்தியா நிச்சயம் முன் வரும். அதுவரை பேச்சுவார்த்கைக்குவாய்ப்பேயில்லை.

இதனால் நான் பேச்சுவார்த்தையை எதிர்ப்பதாக நினைக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் இந்தியா தான்பேச்சுவார்த்தையைத் துவக்கியது. பஸ் மூலம் லாகூர் போய் பேச்சுவார்த்தைக்கு வழி வகுத்தேன். அதற்கு பதிலாகபாகிஸ்தான் கார்கிலில் ஊடுருவியது.

ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்த முஷாரபை அழைத்தோம். ஆனால், நாடாளுமன்றத்தையும் காஷ்மீர்சட்டசபையையும் தாக்கினார்கள்.

இப்போது கொடுத்துள்ள உறுதிமொழிகளை பாகிஸ்தான் உண்மையிலேயே நிறைவேற்றினால் நிச்சயம்இந்தியாவும் இறங்கி வரும். பேச்சுவார்த்தை வேண்டுமானால் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும்.

அணு ஆயத மிரட்டல்களுக்கு இந்தியா பயந்துவிடாது. முதலில் அணுகுண்டைக் காட்டி பிளாக் மெயில் செய்வதைபாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

காஷ்மீர் குறித்த ஐக்கிய நாடுகள் தீர்மானம் குறித்து முஷாரப் பேசினார். அதே ஐக்கிய நாடுகள் சபை தான்தீவிரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. தீவிரவாதத்தை தூண்டும் நாடுகள், உதவும்நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. அதிகாரம் தந்துள்ளது என்றார் வாஜ்பாய்.

இந்த மாநாடு ஆசிய பாதுகாப்பு குறித்து ஆராய கூட்டப்பட்டது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் விவகாரம்பெரிதாகிவிட்டதால் இந்த மாநாடு முழுவதும் தீவிரவாதிகள் விவகாரம் தான் பேசப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X