For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரை நிர்வாண எம்.எல்.ஏ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகியுள்ள எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் சட்டசபைக்கு சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக வந்துதமிழகத்தை கேவலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டை அணியா போராட்டம் நடத்தியதே அவருக்கும், பாமக தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட முக்கியக் காரணமாகஅமைந்தது என்றும் கூறப்படுகிறது.

தேவேந்திர குல இளைஞர்கள் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தவர் முருகவேல் ராஜன். சொந்த ஊர் மதுரை. தென் மாவட்டங்களில்இந்த சங்கம் ஓரளவு வளர்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் வட மாவட்டக் கட்சி என்ற பெயர் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிதென் மாவட்டங்களிலும் வளர விருப்பம் காட்டியது.

இதையடுத்து டாக்டர் ராமதாஸ் அழைப்பின் பேரில் முருகவேல் ராஜன் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார். பொதுத் தேர்தலில்அவருக்கு சம்பந்தமேயில்லாத வந்தவாசி தொகுதியில் நிறுத்தினார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் தலித் எம்.எல்.ஏக்களுக்கு மரியாதை இல்லை என்ற பேச்சு நிலவியபோதும், முருகவேல் ராஜனுக்குராமதாஸிடம் நல்ல செல்வாக்கு இருந்தது. இருப்பினும் இது நெடு நிாள் நீடிக்கவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று கூறி சட்டை போடாமல் வந்து பெண் எம்.எல்.ஏக்களையும் தமிழகத்தையும்முகம் சுளிக்க வைத்தார். இந்தப் போராட்டத்தால் ஆளுங்கட்சியினர் அதிருப்தி அடைந்தார்களோ இல்லையோ, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர்கள் முகம் சுளித்தனர்.

போட்டுக் கொடுத்த தலைவர்கள்:

குறிப்பாக காடு வெட்டி குரு (ஆண்டிமடம் எம்.எல்.ஏ), ஏ.கே.மூர்த்தி (செங்கல்பட்டு எம்.பி.) போன்ற தலைவர்கள் கட்சித் தலைவர்ராமதாஸிடம் தங்களது குமுறலைக் கொட்டினர். சட்டசபைத் தலைவர் ஜி.கே.மணியிடமோ அல்லது உங்களிடமோ சொல்லாமல்தான்தோன்றித்தனமாக இவர் போராட்டம் நடத்தியுள்ளார்.

இதன் மூலம் தனக்கு சுய விளம்பரம் தேடிக் கொள்ள முயல்கிறார். முருகவேல் ராஜன் யார் என்றே இத்தனை நாள் தெரியாமல் இருந்தது.ஆனால் இப்போது தமிழகம் முழுவதும் தெரிந்த நபராகி விட்டார். இவரை இப்படியே விட்டால் கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் போய்விடுவார் என்று "போட்டுக்" கொடுத்துள்ளனர்.

இதையடுத்து முருகவேல்ராஜனைக் கூப்பிட்டு டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல் ஜி.கே.மணியிடம் கேட்காமல்எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தப்பட்டார். அது முதல் முருகவேல்ராஜன் கட்சியில் ஓரம் கட்டப்பட்டுவந்துள்ளார்.

கிட்டத்தட்ட கூண்டில் அடைக்கப்பட்ட கிளியின் நிலையில் அவர் இருந்தார்.

சிவகாமி வின்சென்ட்:

இந்த சூழ்நிலையில்தான் மற்றொரு தலித் எம்.எல்.ஏவான சிவகாமி வின்சென்ட், ராமதாஸுக்கு எதிராக புரட்சி செய்தார். யாருமேராமதாஸுக்கு எதிராக பேச மாட்டார்கள் என்று நினைத்திருந்த நேரத்தில் ராமதாஸ் மீது சரமாரியாக புகார் கூறினார் சிவகாமி.

இனிமேல் தனித்து செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்தார். சிவகாமியின் இந்த செயல் முருகவேல் ராஜனுக்கு தெம்பைக்கொடுத்துள்ளது. சிவகாமியின் வழியைப் பின்பற்ற அவர் முடிவு செய்தார். இருப்பினும் சரியான நிேரத்துக்காக அவர் காத்திருந்தார்.

இந்த நேரத்தில்தான் அச்சிரப்பாக்கம் இடைத் தேர்தல் வந்தது. தொகுதியை தக்க வைக்க பாமக கடுமையாக போராட வேண்டியிருந்தது.ஆனால் படுதோல்வியடைந்துள்ளது. தலித் வாக்காளர்கள் அக் கட்சிக்கு முற்றிலும் ஓட்டுப் போடவில்லை என்று கூறப்படுகிறது. கட்சிக்குள்உள்ள தலித் பிரிவினர் சுத்தமாக வேலை செய்யவில்லை.

திமுகவால் தப்பிய டெபாசிட்:

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படாத காரணத்தால் தலித் வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குப் போய்விட்டது. தொகுதியில் தலித் வாக்குகளே அதிகம் உள்ளது. பரம்பரை விரோதியான பாமகவுக்கு அவர்கள் ஓட்டுப் போடவில்லை.

எனவே திமுக ஓட்டுகளை வைத்துத் தான் டெபாசிட்டையே திரும்பப் பெற பாமக வேட்பாளரால் முடிந்தது.

அச்சிரப்பாக்கம் தொகுதியில் பாமக தோல்வி அடைந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட முருகவேல் ராஜன் சொந்த ஊரான மதுரைக்குசென்று அங்கு வைத்து தனது முடிவை அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு கருதியும், தென் மாவட்ட தலித் மக்களை தனக்கு ஆதரவாக திருப்பும் எண்ணத்திலுமே அவர் மதுரையில் வைத்து தனதுமுடிவை அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

அதிமுகவில் சேருவார்:

முருகவேல் ராஜன் விரைவில் அதிமுகவில் சேருவார் என்று தெரிகிறது. ஆனால் இப்போது சேர்ந்தால் அவரது எம்.எல்.ஏ பதவி பறி போய்விடும். எனவே சிவகாமி போல (அவரும் கூட சேருவதற்காக காத்திருக்கிறார்?) முருகவேல் ராஜனும் தனித்து செயல்படுவார்.

பாமகவை உடைக்க அதிமுக ரகசிய வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக ரொம்ப நாட்களாக பேச்சு அடிபடுகிறது. தற்போது அது உண்மையோஎன்ற எண்ணம் வலுப்பட்டுள்ளது. அடுத்த வாரங்களில் மேலும் சில பரபரப்பான அரசியல் சம்பவங்களை தமிழகம் காணலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X