For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸால் எனது உயிருக்கு ஆபத்து

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகியதால் தனது உயிருக்கு ராமதாஸால் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் முருகவேல் ராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பாட்டாளி மக்கள் கட்சி தனது கொள்கைகள், லட்சியங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விட்டது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை.

அடித்தட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பாமக இன்று மேல் தட்டுவாசிகளின் கூடாரமாகி விட்டது. சுயநலமிகளின் கைப்பாவையாகடாக்டர் ராமதாஸ் செயல்படுகிறார்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்தவனான என்னைத் திட்டமிட்டு தென்னக மக்களிடமிருந்து பிரித்தார் ராமதாஸ். தென் மாவட்டங்களில்பாமகவை வளர்த்த என்னைக் கூப்பிட்டு திருச்சி, கரூர் பகுதிகளில் செயல்பட வைத்தார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்துஎன்னைப் பிரித்தார்.

ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டு சமீப காலங்களில் அவர் எடுத்த சில முடிவுகளால் கட்சியின் அனைத்துத் தரப்பு தொண்டர்களும்ஏமாற்றப்பட்டு விட்டனர்.

சாதிரீதியாக அவர் செயல்பட்ட முறையால் அவரது மனதில் எவ்வளவு பயங்கர சிந்தனைகள் இருக்கிறது என்பதை கட்சியில் இருக்கிறதாழ்த்தப்பட்ட மக்கள் புரிந்து கொண்டு விட்டோம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாமகவில் இழைக்கப்பட்டு வரும் அவமானங்கள், அவமரியாதைகள் சொல்லில் அடங்காதவை. தேவேந்திரகுல மக்களுக்கு சமூக நீதி, அந்தஸ்து, கெளரவம் வாங்கித் தருவதாக கூறி நாடகமாடி விட்டார் ராமதாஸ்.

வந்தவாசி தொகுதியின் சுதந்திர எம்.எல்.ஏவாக செயல்பட நான் விரும்புகிறேன். எனவேதான், தாராபுரம் தொகுதியின் சிவகாமிவின்சென்ட் போல நானும் தனித்து செயல்படப் போகிறேன். பாமகவிலிருந்து நான் விலகி விட்டேன்.

பாமகவிலிருந்து நான் விலகியுள்ளதால் ராமதாஸ் மற்றும் பாமகவினரால் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினர் மற்றும் எனக்காகபதவிகளை உதறித் தள்ளிய மதுரை மாவட்ட பாமகவினர் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே உரிய பாதுகாப்பு அளிக்குமாறு ஆளுநர், சபாநாயகர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X