For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு: வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

அல்மாட்டி (கஜாகிஸ்தான்):

தனது பகுதியில் உளள தீவிரவாத முகாம்களை ஒழித்துக் கட்டிவிட்டு, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதைபாகிஸ்தான் தடுக்காத வரை அந் நாட்டுடன் பேச்சுவார்த்தையே கிடையாது. அதே போல படைகளையும்எல்லையில் இருந்து திரும்பப் பெற மாட்டோம் என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

நேற்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வாஜ்பாய் சந்தித்துப் பேசினார். முன்னதாக புடின் பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுடன் பேசினார்.

வாஜ்பாயையும் முஷாரபையும் சந்திக்க வைக்க அமெரிக்கா நிர்பந்தித்தாலும் ரஷ்ய அதிபர் நிர்பந்தம்செய்யவில்லை. தனித்தனியே பேசினார்.

இதன் தொடர்ச்சியாக முஷாரப் மாஸ்கோவில் சென்று புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதே நேரத்தில் புடின் இந்தியா வந்து பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புடினுடன் சந்திப்புக்குப் பின் சீன அதிபர் ஜியாங் ஜெமினையும் வாஜ்பாய் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து தனது நான்கு நாள் பயணத்தை வாஜ்பாய் இன்று முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டுகிறார்.இந்தியா திரும்பும் முன் சர்வதேச நிருபர்களை பிரதமர் வாஜ்பாய் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாக். கோரிக்கை நிராகரிப்பு:

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதைபாகிஸ்தான் நிறுத்த வேண்டும். தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிக்க எல்லையில் சர்வதேசபார்வையாளர்களை நிறுத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை ஏற்க மாட்டோம். இந்த விஷயத்தில்மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது.

தீவிரவாதிகளைத் தடுக்க பாகிஸ்தான் உண்மையிலேயே முன் வந்தால் அந்த நாட்டுடன் இணைந்தே கூடஎல்லையில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியா தயார். எங்கிருந்து தீவிரவாதிகள் வருகிறார்கள்என்பதைக் கண்டறிந்து ஒழித்துவிடலாம்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படும் வரை இந்தியப் படைகள் எல்லையைவிட்டு ஒரு இன்ச்கூட நகராது. இப்போது பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் பகுதியில் 3,000 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையகாத்துக் கொண்டுள்ளனர். அவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உண்டு.

நெருக்குதலில் பாகிஸ்தான்:

இதை நாங்கள் மட்டுமல்ல, உலகமே பாகிஸ்தானிடம் கூறிவிட்டது. தீவிரவாதிகள் விவகாரத்தில் இந்தியாவுக்குஉலக நாடுகளின் முழு ஆதரவு கிடைத்துவிட்டது. பாகிஸ்தான் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதற்கு முன்இந்தியாவுக்கு இப்படிப்பட்ட ஆதரவு எப்போதும் கிடைத்ததில்லை.

தீவிரவாதிகள் நுழைவது தடுக்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், தீவிரவாதிகள் வருவதை எங்கள்ராணுவம் உறுதி செய்துள்ளது. இங்கே நேற்று முஷாரப் தீவிரவாதிகளை தடுத்துவிட்டதாக பேசிக்கொண்டிருந்தபோதே எல்லையில் வன்முறை நடந்து கொண்டிருந்தது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு நேர்மைவேண்டும். வெறும் பேச்சு உதவாது.

காஷ்மீர் உள்பட எல்லா விவகாரஙகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச இந்தியா தயார். ஆனால், அதற்கு முன்தீவிரவாதம் ஒழிய வேண்டும். அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பி வரும் பாகிஸ்தான் அதை நிறுத்த வேண்டும்.

தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு நிதியுதவு செய்வதை நிறுத்தவும் பல நாடுகள் முன்வந்துள்ளன.இதனால், பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலும் பெரும் நெருக்குதல் உருவாகியுள்ளது.

முஷாரப் ஒப்புக் கொண்டார்:

ஆக்ராவுக்கு வந்த முஷாரப் தீவிரவாதிகளே எங்கள் நாட்டில் இல்லை என்றார். இப்போது அவர்களை ஒடுக்கநடவடிக்கை எடுப்பதாகக் கூறி தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்து வந்ததை ஒப்புக் கொண்டுவிட்டார்.

எல்லையில் படைகளை நிறுத்தியுள்ளதால் ஏகப்பட்ட நிதி செலவாகி வருவது உண்மை தான். ஆனால், இந்தியப்பொருளாதாரத்தால் அதை சமாளித்துவிடும் அளவுக்கு பலத்துடன் உள்ளது என்றார் வாஜ்பாய்.

இந்தியாவுக்குப் போட்டியாக தனது படைகளை எல்லையில் நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தான் பொருளாதாரரீதியில்பெரும் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலம் படைகளை பாகிஸ்தான் நிறுத்தினால் அதன் பொருளாதாரம் சரி செய்ய முடியாத அளவுக்குசீர்குலையும் என்று கருதப்படுகிறது. இதனால் தான் எப்படியாவது இந்தியாவிடம் பேசி படைகளை எல்லையில்இருந்து நகர்த்திவிட முஷாரப் துடித்து வருகிறார். ஆனால், இதை உணர்ந்து தான் இந்தியா மேலும் மேலும்நெருக்குதல் தந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X