For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா, சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கு வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான அன்னிய செலாவணி (Foreign exchange)வழக்கை அமலாக்கப் பிரிவு கைவிட்டுள்ளது.

இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும். ஆனால், இவர்கள் மீது குற்றத்தை உறுதி செய்ய போதிய ஆதாரம்இல்லை என்று கூறி இந்த வழக்கை அமலாக்கப் பிரிவு கைவிட்டுள்ளது.

1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு வெளிநாட்டில் இருந்து 3 லட்சம் அமெரிக்கடாலரும், சசிகலாவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலரும் வந்தன.

இந்தப் பணம் ஹவாலா (ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் வெளிநாட்டு புரோக்கர்கள் மூலம் அன்னியசெலாவணியை கைமாற்றுவது) மூலமாக இருவருக்கும் வந்ததாக அப்போது கூறப்பட்டது.

இந்தப் பணத்தை இருவரும் தங்கள் வங்கிக் கணக்கில் போட்டனர். ஆனால், இந்தப் பணத்தை யார் அனுப்பியது,எதற்காக இந்தப் பணம் கைமாறியது என்பது குறித்த விவரங்களை இருவரும் மத்திய ரிசர்வ் வங்கிக்குத்தெரிவிக்கவில்லை.

இதையடுத்து அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குத் தொடரஅமலாக்கப் பிரிவினருக்கு (Enforcement directorate) அனுமதி தந்தார்.

இதையடுத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் அமலாக்கப் பிரிவினர்தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கப் பிரிவின் அலுவலகத்தில் சசிகலா பல முறைவிசாரிக்கப்பட்டுள்ளார். அப்போதெல்லாம் அவரை படம் பிடிக்க முயலும் பத்திரிக்கையாளர்களை ஆளும்அதிமுகவினர் அடித்து விரட்டிய கதையெல்லாம் நடந்தது.

திடீரென வெவ்வேறு கார்ளில் மாறி மாறி அமலாக்கப் பிரிவின் பின் பக்க வாசல் வழியாக எல்லாம் சசிகலாசென்றுள்ளார். சசிகலா மட்டுமின்றி அவரது உறவினர்கள் கூட விசாரிக்கப்பட்டனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் வைத்து அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தியாக எல்லாம் அப்போது கூறப்பட்டது.

இந்த விசாரணைகளுக்குப் பின் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதாரகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவர்கள் மீது பெரா சட்டப்படி (FERA- Foreign ExchangeRegulation Act) வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணுக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் மற்றும் சில வங்கி அதிகாரிகளும்இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு மிக பரபரப்பாக இந்த விசாரணை தொடங்கியது.

இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கப் பிரிவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விபத்தில் இறந்தார். இது போன்றகாரணங்களால் விசாரணை வேகம் மிகவும் தாமதமானது.

ஆனால், இப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான பெரா வழக்கையே மத்திய அமலாக்கப் பிரிவுகைவிட்டுள்ளது.

இந்தப் பணம் ஹவாலா சேனல்கள் வழியாக ஜெயலிதாவுக்கும் சசிகலாவுக்கும் வந்ததை உறுதிப்படுத்த போதுமானஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கை அலாக்கப் பிரிவு வாபஸ் வாங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் இதைத் தெரிவித்துள்ளது. மேலும் தங்களுக்கு இந்தப் பணம்வந்ததை வருமான வரிக் கணக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சுட்டிக் காட்டி இருப்பதாகவும் அமலாக்கப் பிரிவுகூறியுள்ளது.

ஆனால், அரசியல் நெருக்கடி காரணமாக இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார். இது தொடர்பாக யாராவது மேல்முறையீட்டு வழக்கு போட்டாலே மீண்டும்விசாரணை தொடங்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் இந்த பெரா சட்டத்தையே மத்திய அரசு வாபஸ் வாங்கியது. அன்னிய செலாவணி மோசடிதொடர்பான வழக்குகள் இனி வேறு சட்டப்படி விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆனால், ஜெயலலிதா, சசிகலாவின் மீதான பெரா வழக்கு வேறு சட்டத்தின் படி பதிவு செய்யப்படவில்லை.ஆதாரமில்லை என்ற காரணம் காட்டப்பட்டு வழக்கே கைவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X