For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விமான நிலையத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ:

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தாலும் எல்லையில் சண்டை தொடர்கிறது.

பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் பீரங்கித் தாக்குதலில் இன்று பூஞ்ச் விமான நிலையம்சேதமடைந்தது. பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் விமான நிலையத்தை பாகிஸ்தான் படைகள்குறி வைத்துத் தாக்கியுள்ளது அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இதையடுத்து ராணுவமும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதிகாலை 3 மணிக்குத் தொடங்கிய இந்த பதிலடித்தாக்குதல் பிற்பகல் வரை தொடர்ந்தது.

அதிகாரி பலி:

அதே போல நெளஷெரா என்ற இடத்தில் பாகிஸ்தானிய துப்பாகித் தாக்குதலில் ராணுவ அதிகாரி லெப்டினன்ட்அபய் கொல்லப்பட்டார். ராணுவ வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்தியாவுக்கு இஸ்ரேலிய உதவி: பாக் புகார்

இந் நிலையில் தனது நாட்டுக்குள் ஊடுருவிய இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் இஸ்ரேலில்தயாரிக்கப்பட்டது என பாகிஸ்தான் கூறியுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தில் இஸ்ரேலிய நிறுவனத்தின் பெயர் இருப்பதாகவும் அதை இந்தியாவுக்காகஇஸ்ரேலிய நிபுணர்கள் தான் இயக்கி வருகின்றனர் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

இஸ்ரேலிய நிபுணர்கள் இந்தியாவில் இருந்தவண்ணம் இந்த விமானங்களை பாகிஸ்தான் மீது இயக்கி உளவுபார்த்து வருகின்றனர் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விமானத்தை 13,000 அடி உயரத்தில் பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாடு கூறுகிறது.

காஷ்மீரில் பந்த்:

இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு உதவிய ஹூரியத் அமைப்பின் தலைவர் சைய்த் அலி ஷா ஜீலானி கைதுசெய்யப்படைத் கண்டித்து இன்று ஸ்ரீநகரில் பந்த் நடக்கிறது. இந்த பந்தினால் அங்கு இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

காஷ்மீரில் இயங்கி வரும் தனது தீவிரவாதிகளுக்கு இவர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள ஹிஸ்புல் முஜாகிதீன்அமைப்பு பணம் அனுப்பி வந்தது தெரியவந்ததால் இவர் கைது செய்யப்பட்டார். போடோ சட்டத்தின் கீழ் கைதாகிசிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜீலானி.

இவர் வீட்டில் சிக்கிய லேப்டாப்பில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்த மேப்கள் இருந்தன.

இவரது மருமகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீலானியின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள்,லாக்கர்களும் இன்று வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டன.

4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X