For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கலாம் என்ன செய்கிறார்?

By Staff
Google Oneindia Tamil News

- அறிவழகன்

72 வயதாகிறது. பல்வேறு பதவிகளை வகித்து ஓய்வும் பெற்றாகி விட்டது. இருப்பினும் இன்னும் தனது கடும் உழைப்பை வெளிப்படுத்திவருகிறார் பாரத ரத்னா அப்துல் கலாம்.

மத்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அப்துல் கலாமுக்கு பல இடங்களிலிருந்தும் அழைப்புகள்வந்தன. ஆனால் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அழைப்பை மட்டுமே ஏற்றுக் கொண்டார். காரணம், அந்த பதவியின் மூலம்மாணவர்களை, இளைஞர்களை அடிக்கடி சந்திக்க முடியும். தனது கனவுகளை அவர்கள் மூலம் நிறைவேற்ற முடியும் என்பதே.

சரி இப்போது அப்துல் கலாமின் பணி என்ன. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்ற பிரிவின் தலைமைபேராசிரியராக உள்ளார் கலாம். அதிகாலையில் எழுந்து தனது பணிகளை ஆரம்பிக்கும் கலாம் இரவு 10 மணிக்கு மேல்தான் படுக்கப்போகிறாராம்.

பல்கலை வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லம்தான் இப்போதைக்கு கலாமின் ஜாகை.

இந்தப் புதிய பதவிக்கு கலாம் வந்து 6 மாதங்களைத் தாண்டி விட்டது. இதுவரை மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சம்பந்தமாக 50க்கும்மேற்பட்ட உரைகளை அவர் நிகழ்த்தியுள்ளாராம்.

தனது உரையைக் கேட்பதோடு நின்று விடாமல், சந்தேகம் கேட்க வேண்டும் என்றும் மாணவர்களை அடிக்கடி வலியுறுத்துகிறார். சந்தேகம்தெளியத் தெளியத்தான் ஒரு தெளிவு கிடைக்கும், முடிவு தெரியும் என்று கூறுவாராம் கலாம். அது மட்டுமல்ல, கலாமுக்கு ஏராளமானஇ-மெயில்களும் வருகின்றன.

அதற்கும் சளைக்காமல்பதில் அனுப்பி விடுவாராம் கலாம்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் அவ்வப்போது பள்ளி மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதுவரை50,000 மாணவர்களை அவர் சந்தித்துள்ளார். ஒவ்வொரு முறையும் பள்ளி மாணவர்களிடையே அப்துல் கலாம் உரையாடும் போதுதிருக்குறளும், அறிவியல் சிந்தனைகளும்தான் அதிகம் தென்படுகின்றன.

அந்த அளவுக்கு குறளையும், அறிவியலையும் ஒரு சேர மதிக்கிறார் கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் திட்டங்களுக்கும் ஆலோசகராக இருந்து வருகிறார் கலாம். இப்போது பல்கலைக்கழகத்தில் மூளைஆய்வுத் திட்டம் ஒன்றைத் துவக்க திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் மன வளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனவளர்ச்சி குறைந்தவர்களும், மற்றவர்கள் போலவே செயல்பட முடியும் என்பது கலாமின் நோக்கம்.

இதுதவிர, பழங்கால ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து, அதில் உள்ளவற்றை இன்டர்நெட் மூலம் வருங்கால தலைறையினருக்கு வழங்குவதுதொடர்பான பணியிலும் கலாம் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் கலாம் குறித்துக் கேட்டால், இவரை மாதிரி ஒரு அதிசய மனிதரை கனவில் கூட நாங்கள்சந்தித்ததில்லை. அந்த அளவுக்கு வெகு சாதாரண மனிதராக இருக்கிறார் என்று ஆச்சரியம் காட்டுகிறார்கள்.

நல்ல காலம் பார்க்கனுமா?:

நேற்று அவரை மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன தொடர்பு கொண்டு எப்போது வேட்புமனு தாக்கல் செய்கிறீார்கள்? நல்ல நாள்- நல்ல நேரம் ஏதாவது பார்த்து அதை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்களாஎன்று கேட்டார்.

பூமியும், சூரியனும் சுற்றுவதால் வருவது தான் நாளும் நேரமும். எனக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான் என்றுபதிலளித்திருக்கிறார்.

பிரமோத் மகாஜன் சிரித்துக் கொண்டே சரி, பிரதமரிடம் அப்படியே சொல்லி விடுகிறேன் என்றாராம்.

காங்கிரஸ் ஆதரவுக்காக காத்திருப்பு:

தன்னை காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து சச்சரவில்லாமல் தேர்வு செய்தால் நல்லது என்றுநினைக்கிறார் கலாம். இதனால் காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கிறார். இன்று மாலைக்குள் காங்கிரஸ் தனதுநிலையை தெளிவுபடுத்தும். இதன் பின்னரே கலாம் மனு தாக்கல் செய்வார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானஅதிகாரிகள்.

நாளை நிருபர்களுடன் சந்திப்பு:

நாளை சென்னையில் பத்தரிக்கை நிருபர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் அப்துல் கலாம். அண்ணாபல்கலைக்கழகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கிறது.

ராமேஸ்வரத்தில் கொண்டாடம்:

கலாம் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படவுள்ளதால் அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் உற்சாகம்கரைபுரண்டு ஓடுகிறது. அந் நகரின் மீனவர்கள் தங்கள் சக மீனவ குடும்பத்தைச் சேர்ந்த கலாம் இந்தியாவின் முதல்பதவியை எட்டுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் பல இடங்களிலும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி மக்கள் இதைக் கொண்டாடிவருகின்றனர். கலாம் முதலில் படித்த பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியர்களே மாணவர்களுக்குஇனிப்புகளை வழங்கினர்.

அப்துல்கலாமுக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. பள்ளிவாசல்களிலும்அவருக்காக சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.

கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோர் கலாமின் படத்தை வைத்து கொண்டாடி வருகின்றனர்.டீ கடைகளிலும அப்துல் கலாமின் படங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன.

ஊருக்கு வந்தால் எங்களையும், தனது ஆசிரியர்களையும் சந்திக்க கலாம் தவறுவதில்லை என்கிறார் கோவில் பூசாரிஒருவர்.

படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், கூலிகள், இந்துக்கள், முஸ்லீம்கள், கிருஸ்தர்கள் என அனைவரையின்இதயங்களையும் வென்றிருக்கிறார் இந்த அதிசய மனிதர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X